மதாம்

மதாம், மு.ராஜேந்திரன், அகநி வெளியீடு, பக். 336, விலை ரூ.400.

ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாள்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்று நாவல் இது.

1742 முதல் 1754 வரை புதுச்சேரி கவர்னராக இருந்த ஜோசப் துயூப்ளேவின் மனைவி ழான் சீமாட்டியை மையப்படுத்தி நிகழ்ந்த சம்பவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்து சுவாரஸ்யமான நாவலாக உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

இந்திய வம்சாவளித் தாய்க்கும், ஐரோப்பிய தந்தைக்கும் மகளாக பிறந்தவர்தான் ழான். தனது 13-ஆவது வயதில் தன்னை விட வயதில் மிகவும் மூத்த வேன்சான் என்ற பிரெஞ்சு வணிகரை மணந்தாள். கணவருடைய மரணத்துக்குப் பிறகு, தனது வணிகக் கூட்டாளியான ஜோசப் துயூப்ளேவை இரண்டாவதாக மணந்தாள். பாரீஸிலுள்ள பிரெஞ்ச் அரசுக்குக் கையூட்டு கொடுத்து புதுச்சேரி கவர்னராக துயூப்ளே பதவியேற்றார்.

புதுச்சேரி கவர்னரின் மனைவி என்ற அந்தஸ்தையும் தனக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கையும் பயன்படுத்தி ழான் சீமாட்டி பெரும் செல்வம் சேர்த்தாள்.

ஒரு கட்டத்தில் அன்றைய இந்திய அரசியல், போர் நடவடிக்கைகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள், நீதி பரிபாலனங்கள், புதுச்சேரியின் மத விவகாரங்களில் தலையிட்டு அவளது விருப்பப்படி முடிவுகள் எடுக்குமளவுக்கு சாமர்த்தியமாகச் செயல்பட்டாள்.

அன்றைய ஒட்டுமொத்த இந்தியாவின் பல்வேறு ஆட்சியாளர்களுக்கு இடையே நிலவி வந்த ஒற்றுமையின்மை, பதவி வெறி, நீதி முறை, மத நம்பிக்கை, ஐரோப்பியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி, கலை, கலாசாரம், வாழ்க்கை முறை, கொலை, கொள்ளை, துரோகங்களை இந்நாவல் சித்திரிக்கிறது.

நாவலில் இடம்பெற்றுள்ள சம்பவங்களுக்குத் தொடர்புடைய புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

நன்றி: தினமணி, 19/7/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031442_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *