திருமூர்த்தி மண்

திருமூர்த்தி மண் (நாவல்) படுகளம்-2, ப.க. பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.524, விலை ரூ.530.  நூலாசிரியரின் படுகளம் நாவலைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப்பின் திருமூர்த்தி மண்-படுகளம் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. திருமூர்த்தி மலைக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே உள்ள பள்ளிபுரம் கிராமத்தைச் சுற்றிதான். கரும்பும் நெல்லும் பிரதான தொழில்கள். வழக்கம் போல் ஊரின் 3 முக்கிய கவுண்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே காலம்காலமாக தொடரும் விரோதமே படுகளத்தின் கரு. திருமூர்த்தி மண்- 1935-ஆம் ஆண்டு முதல் 1985 வரையுள்ள 50 ஆண்டு […]

Read more

ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்

ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.125. ஒரு சிலர் குறித்து எத்தனை புத்தகங்கள் வெளிவந்தாலும் அத்தனையும் வாசகர்களின் வரவேற்பைப் பெறும். அவர்கள் குறித்த சம்பவங்களும், செயல்பாடுகளும் ஏற்படுத்தும் வியப்பு அத்தகையவை. மக்கள் மனதில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அதற்குக் காரணம். அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் தமிழகத்தால் கொண்டாடப்படும் ஜே.பி.சந்திரபாபு. சந்திரபாபு நடித்த திரைப்படங்கள் 70. அதில் 25 திரைப்படங்களில் அவரது பாடல்கள் இடம் பெறவில்லை. 45 படங்களில் 65 பாடல்களைப் பாடியிருக்கிறார். […]

Read more

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் உரையாசிரியர்கள் நோக்கு

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் உரையாசிரியர்கள் நோக்கு, கு. முதற்பாவலர். முத்தமிழ் நிலையம்,  பக்.464, விலை ரூ.350. தமிழ் யாப்பியலின் முந்தைய நிலையை எடுத்துரைப்பதாக தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ள ஒரு பகுதிதான் செய்யுளியல். இது பல்வேறு வகைகளாக யாப்பு வகைகளைக் கூறும் பகுதி. செய்யுளியலில் இடம்பெற்ற இலக்கணங்கள் பலவகையான மாற்றங்களையும், வளர்ச்சியையும் அடைந்து, பின்னாளில் தனித்தனி நூல்களாக வெளிவந்திருக்கின்றன. யாப்பியல் தொடர்பாக அறிஞர் பலரும் ஆராய்ந்து அரிய பல தகவல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள் – வெளியிட்டும் வருகின்றனர். அச்சில் வராத யாப்பியல் ஆராய்ச்சி கூட வெளிவந்துள்ளது. காலந்தோறும் […]

Read more

விவேகானந்தம்

விவேகானந்தம், எஸ்.சுஜாதன், தமிழில்: ப.விமலா, காவ்யா, பக். 320, விலை ரூ. 350. மலையாளத்தில் எழுதப்பட்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே விவேகானந்தம். இந்து மதத்தின் சாராம்சங்களை இந்தியாவுக்குள் மட்டுமன்றி மேற்கத்திய நாடுகளிலும் சுவாமி விவேகானந்தர் பரப்புரை செய்தார். இந்தியா, வெளிநாடுகளில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சுமார் ஆறு வருடப் பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை இந்த நாவல் பதிவு செய்துள்ளது.தீவிர இந்து மதப் பற்றாளரான சுவாமி விவேகானந்தர் பிற மதங்களிலுள்ள நல்ல பல கருத்துகளை தயங்காமல் ஏற்றுக்கொண்டார். […]

Read more

குடந்தைப் பகுதி சித்தர்கள்

குடந்தைப் பகுதி சித்தர்கள்,  இரா.கண்ணன், இரா.கண்ணன் வெளியீடு, பக்.380, விலை ரூ.250. தென்னாட்டில் திருக்கோயில்கள் அதிகமிருப்பது போலவே சித்தர்கள் சமாதிநிலை அடைந்த அதிஷ்டானங்களும் அதிகம் உள்ளன. கோயில் நகரம் என அறியப்படும் கும்பகோணம் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள முப்பத்தெட்டு சித்தர்களின் அதிஷ்டானங்கள் பற்றியும் அந்த சித்தர்கள் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் குறித்தும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாடறிந்த சித்தர்களான திருமூலர், பட்டினத்தார், பாடகச்சேரி சுவாமிகள், போதேந்திரர், ஸ்ரீதர ஐயாவாள் போன்றவர்களோடு நாம் அதிகம் அறிந்திராத மூட்டை சுவாமிகள், கத்தரிக்காய் சித்தர், புடலங்காய் […]

Read more

நீர்–நேற்று, இன்று, நாளை?

நீர்–நேற்று, இன்று, நாளை?, ப.திருமலை, மண் மக்கள் மனிதம், விலைரூ.160. இன்றைய உலகின் அவசரத்தேவையும், சிக்கனமாக நாம் பயன்படுத்த வேண்டியதும் நீர் அன்றி வேறில்லை. நீரின்றி அமையாது உலகு. அது எப்படி என்று விளக்க இந்த நூலின் 21 கட்டுரைகள் போதும். மூத்த பத்திரிகையாளரான திருமலை நம் நாட்டின் ‘நீர் அரசியல்’ பற்றி, கேரளா, கர்நாடகாவிடம் நமக்கு நடக்கும் தண்ணீர் போர் பற்றி அருமையாக மூன்று கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார். கண்மாய்கள், ஆறுகளை காக்கும் அற்புத வழிகள், குடிநீரின் தேவை, நீர் மாசு என […]

Read more

சமயங்கள் நான்கு

சமயங்கள் நான்கு, முனைவர் நல்லுார் சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலைரூ.120. மனித வாழ்வை முழுமையாக்குவதே, சமயம் என்ற, நெறியை விளக்கி எழுதப்பட்டுள்ள நுால். தத்துவ விளக்கங்களை மிக எளிமையாக உரைக்கிறது. ஐந்து தலைப்புகளில் உள்ளது. முதல் அத்தியாயம், சமயம் பற்றி தெளிவாக விளக்குகிறது. துணைத் தலைப்புகளில் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பூர்வமாக அணுகி, கருத்துகளை புரிந்து கொள்ள துணை புரிகிறது. தொடர்ந்து, காணாபதியம் என்ற சமயம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. கணபதி வழிபாட்டின் தொன்மை, சிறப்புக்கூறுகள் பற்றி முழுமையாக சொல்கிறது. இது போல், சவுரம், கவுமாரம், […]

Read more

லேனா தமிழ்வாணனின் பொன்மொழிகள்

லேனா தமிழ்வாணனின் பொன்மொழிகள்,சி.தெ.அருள், மணிமேகலை பிரசுரம், விலைரூ.400. பொன்மொழிகள் என்றாலே, மெத்த படித்த மேதாவி, சான்றோர், ஞானிகளின் மொழியாக இருக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை தகர்த்துள்ள நுால். பொன்மொழி என்ற சொல்லுக்கு புதிய இலக்கணம் வகுத்து, பயனுள்ள மொழிகளை கொண்டுள்ளது. பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் எழுதியுள்ள நுால்களில் இருந்து, பயனுள்ள குறிப்புகள், அறிவுரைகளை, பொருளை எளிமையாக உணர்த்தும் சொற்கோர்வைகளைத் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளது. நுாலில், ‘அன்பு உள்ளத்தில் இருந்தால், அதை உள்ளத்தோடு வைத்துக் கொள்ளாமல் உதட்டளவில் சொல்லவும்; அதை உதட்டோடு மட்டும் வைத்துக் […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், விலைரூ.200. வியாசர் மகாபாரதம் சார்ந்த, 60 கதைகளைத் தொகுத்து, புதிய பார்வையில் முன்வைக்கும் நுால். கதை முகப்பில் சுருக்கமான முன்னோட்டம் கொடுத்து, நீதி நெறியைத் விளக்குவதோடு, மையக் கருத்துக்குப் பொருத்தமான ஒரு குறளும் உரையுடன் தரப்பட்டுள்ளது. கதைகளில் வரும் சாபங்கள், விமோசனங்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள், தந்திரங்களுக்கிடையில் இழையோடும் அறக்கருத்துகள், எளிய நடையில் தரப்பட்டுள்ளன. பழங்கதைகளாயினும், அவற்றினுாடே காணப்படும் நிர்வாக மேலாண்மை, அரசியல் நெறிகள், அறச் சீற்றங்கள் இன்றும் பொருந்துவது நோக்கத்தக்கது. வாழ்வில் சிலருக்கே, மதியும், […]

Read more

பெண் எனும் பேரிலக்கியம்

பெண் எனும் பேரிலக்கியம், கவிஞர் துரைசாமி, நவீனா பதிப்பகம், விலை 60ரூ. பெண்மை தொடர்பாகவும், மனித வாழ்வின் உள்ளடக்கத்தைக் கொண்டவைகள் குறித்தும் எழுதப்பட்ட 33 கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அனைத்துக் கவிதைகளும் படிப்பதற்கு இதமாக இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 8