சைவ சித்தாந்தம்: அடிப்படைகள்

சைவ சித்தாந்தம்: அடிப்படைகள், முனைவர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலைரூ.50. சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள், தத்துவத்தை எளிய நடையில், இனிய தமிழில் வழங்கியுள்ள நுால். தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தின் விளக்கம், அதன் பயனை எளிமையாக சொல்கிறது. பரம்பொருள் உயிர்களை ஈடேற்றும் கருவியாக இது உள்ளது. உயிர்களை ஆணவத்திலிருந்து விடுவிக்க தொடர்ந்து இயங்கும் கூத்தப் பெருமானை பற்றி விளக்குகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால். – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சமயங்கள் நான்கு

சமயங்கள் நான்கு, முனைவர் நல்லுார் சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலைரூ.120. மனித வாழ்வை முழுமையாக்குவதே, சமயம் என்ற, நெறியை விளக்கி எழுதப்பட்டுள்ள நுால். தத்துவ விளக்கங்களை மிக எளிமையாக உரைக்கிறது. ஐந்து தலைப்புகளில் உள்ளது. முதல் அத்தியாயம், சமயம் பற்றி தெளிவாக விளக்குகிறது. துணைத் தலைப்புகளில் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பூர்வமாக அணுகி, கருத்துகளை புரிந்து கொள்ள துணை புரிகிறது. தொடர்ந்து, காணாபதியம் என்ற சமயம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. கணபதி வழிபாட்டின் தொன்மை, சிறப்புக்கூறுகள் பற்றி முழுமையாக சொல்கிறது. இது போல், சவுரம், கவுமாரம், […]

Read more

கடவுளால் முடியாத செயல்கள்

கடவுளால் முடியாத செயல்கள், முரு.பழ.ரத்தினம் செட்டியார், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 125ரூ. மயிலம், பொம்மபுர ஆதினத் திருமடத்தில் நடந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 12ம் ஆண்டு விழா மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல். சைவ சித்தாந்த ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல ஆய்வுப் பெட்டகமாகவும், ஆய்வு அணுகுமுறைகளோடு சைவ சித்தாந்தத்தை உணர வைக்கிறது. அத்துடன் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஆராய்பவர்கள் ஆராய்ச்சி முறைகளுக்காகவும், தெளிவுக்காகவும் படிக்க வேண்டிய புத்தகம். முரு.பழ.ரத்தினம் செட்டியார் […]

Read more

சிவயோகி மா.இரத்தின சபாபதிப்பிள்ளை படைப்புகள்

சிவயோகி மா.இரத்தின சபாபதிப்பிள்ளை படைப்புகள், பேராசிரியர் முனைவர் நல்லூர் சா. சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 450ரூ. விநாயக புராணத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ நூலுக்கு யோகத் தெளிவு தந்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமந்திரத்திற்கு எழுதிய முன்னுரை, திருமந்திரத்தின் அனுபவ முறை, திருமந்திரத்தின் மூலமான மரணமிலாத் தன்மை எனத் திருமந்திரத்தை விளக்கும் சிவயோகியின் பிற நூல்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கடவுளை அடைய உடலைப் பயன்படுத்தும் நெறிமுறைகளை தெளிவாக விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

பாம்பன் சுவாமிகள் பெருமை

பாம்பன் சுவாமிகள் பெருமை, முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், 4, வேங்கடேச அக்ரகாரம் சாலை, சென்னை 4, பக்கங்கள் 136, விலை 50ரூ. அகத்தியர், நக்கீரர், அவ்வையார், அருணகிரிநாதருக்குப் பின் முருகன் அருள் பெற்று 6666 பாடல்களைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் இல்லற வாழ்வு, துறவற ஞானம் போன்ற வரலாற்று செய்திகளை, அவரது பாடல் ஆதாரங்களுடன் இந்நூலாசிரியர் அருமையாக, எளிமையாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். பாம்பனாரின் பாடல்கள், நூல்கள், பண்பு நலன்கள், அவரது அளவற்ற வடமொழி, தமிழ்ப்புலமை, அவரது […]

Read more