சிவயோகி மா.இரத்தின சபாபதிப்பிள்ளை படைப்புகள்

சிவயோகி மா.இரத்தின சபாபதிப்பிள்ளை படைப்புகள், பேராசிரியர் முனைவர் நல்லூர் சா. சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 450ரூ. விநாயக புராணத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ நூலுக்கு யோகத் தெளிவு தந்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமந்திரத்திற்கு எழுதிய முன்னுரை, திருமந்திரத்தின் அனுபவ முறை, திருமந்திரத்தின் மூலமான மரணமிலாத் தன்மை எனத் திருமந்திரத்தை விளக்கும் சிவயோகியின் பிற நூல்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கடவுளை அடைய உடலைப் பயன்படுத்தும் நெறிமுறைகளை தெளிவாக விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more