சமயங்கள் நான்கு
சமயங்கள் நான்கு, முனைவர் நல்லுார் சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலைரூ.120.
மனித வாழ்வை முழுமையாக்குவதே, சமயம் என்ற, நெறியை விளக்கி எழுதப்பட்டுள்ள நுால். தத்துவ விளக்கங்களை மிக எளிமையாக உரைக்கிறது. ஐந்து தலைப்புகளில் உள்ளது.
முதல் அத்தியாயம், சமயம் பற்றி தெளிவாக விளக்குகிறது. துணைத் தலைப்புகளில் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பூர்வமாக அணுகி, கருத்துகளை புரிந்து கொள்ள துணை புரிகிறது.
தொடர்ந்து, காணாபதியம் என்ற சமயம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. கணபதி வழிபாட்டின் தொன்மை, சிறப்புக்கூறுகள் பற்றி முழுமையாக சொல்கிறது. இது போல், சவுரம், கவுமாரம், சாக்தம் ஆகிய சமயங்கள் பற்றியும் சுருக்கமாக, புரியும் வகையில் உள்ளது. சமயங்களின் அடிநாதம் பற்றி அறிய விரும்புவோருக்கு உதவும் நுால்.
நன்றி: தினமலர், 9/5/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818