பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீ பாலகங்கா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 90ரூ. பாரத நாடு பாருக்கெல்லாம் அளித்த ஞானக் கொடை பகவத் கீதை. உள்ளம் தெளிவுற உலகோர் கீதையை படிக்கின்றனர். கீழைக்கு ஆதிசங்கரர் முதல் பலரும் வடமொழியில் விளக்கம் எழுதியுள்ளனர். பகவத் கீதை வெண்பா, பாரதியார் விளக்கம், கண்ணதாசன் விளக்கம், சுவாமி சித்பவானந்தர் ஆராய்ச்சி விளக்கம் எனப் பல நூல்கள் கீதைக்கு தமிழாக்கமாக வந்துள்ளன. இந்நூலில், 18 அத்தியாயங்களும் தெளிவுரையாக விளக்கம் தரப்பட்டுள்ளன. சுலோகங்களே இல்லாமல் கருத்துக்களைத் தொகுத்துள்ளார். அன்றாட […]

Read more

பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 90ரூ. ‘பகவத் கீதை’ என்பது கிருஷ்ணன் அர்சுனனுக்கு கூறிய அறிவுரையாக மட்டுமல்ல… சாதாரண வாழ்க்கையைச் சிறப்பாக வாழ நினைப்பவர்களுக்கும், உயர் வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கும் காலங்காலமாக வழிகாட்டியாக இருந்து வந்துள்ளது என்பதை எளிய முறையில் விளக்கிச் செல்வதாகும் என்பதை எடுத்துக்காட்டும் நூல். -இரா.மணிகண்டன். நன்றி: குமுதம், 11/1/2017.

Read more

பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீபாலகங்கை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. மகாபாரதத்தில் முக்கியமான பகுதி பகவத்கீதை. போர்க்களத்தில், “உறவினர்களை கொன்று குவிப்பதா?” என்று சோர்வு அடையும் அர்ச்சுனனுக்கு கண்ணன் செய்யும் உபதேசமே பகவத்கீதை. இதில், மனிதர்களின் கடமை, நீதி – அநீதி பற்றிய விளக்கம், மனித குலம் அறிய வேண்டிய உண்மைகள் யாவும் அடங்கியுள்ளன. பகவத் கீதையை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், எளிய – இனிய நடையில் எழுதியுள்ளார், புலவர் கோ. அருளாளன். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ. தமிழின முன்னோடி எழுத்தாளர்களில், எல்லோராலும் அன்புடனம், பாசத்துடனும் சு,ரா, என அழைக்கப்படுவர் சந்தர ராமசாமி. இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை என, பல சிந்தனைக் களங்களில் கால் பதித்த பெருமகனார், பன்மொழி வித்தகர், பல விருதுகளுக்கு உறவுக்காரர். அவரது 42 ஆண்டு கால படைப்புகள் பற்றிய பதிவுகள், கட்டுரைகள், என்னுரைகள், கேள்வி-பதில், நாட்குறிப்புகள் என, பல வகைகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகம். தமிழ் இலக்கியம் […]

Read more

பாம்பன் சுவாமிகள் பெருமை

பாம்பன் சுவாமிகள் பெருமை, முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், 4, வேங்கடேச அக்ரகாரம் சாலை, சென்னை 4, பக்கங்கள் 136, விலை 50ரூ. அகத்தியர், நக்கீரர், அவ்வையார், அருணகிரிநாதருக்குப் பின் முருகன் அருள் பெற்று 6666 பாடல்களைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் இல்லற வாழ்வு, துறவற ஞானம் போன்ற வரலாற்று செய்திகளை, அவரது பாடல் ஆதாரங்களுடன் இந்நூலாசிரியர் அருமையாக, எளிமையாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். பாம்பனாரின் பாடல்கள், நூல்கள், பண்பு நலன்கள், அவரது அளவற்ற வடமொழி, தமிழ்ப்புலமை, அவரது […]

Read more