நானும் என் எழுத்தும்
நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ.
தமிழின முன்னோடி எழுத்தாளர்களில், எல்லோராலும் அன்புடனம், பாசத்துடனும் சு,ரா, என அழைக்கப்படுவர் சந்தர ராமசாமி. இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை என, பல சிந்தனைக் களங்களில் கால் பதித்த பெருமகனார், பன்மொழி வித்தகர், பல விருதுகளுக்கு உறவுக்காரர். அவரது 42 ஆண்டு கால படைப்புகள் பற்றிய பதிவுகள், கட்டுரைகள், என்னுரைகள், கேள்வி-பதில், நாட்குறிப்புகள் என, பல வகைகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகம். தமிழ் இலக்கியம் சார்ந்த எதிர்மறையான எண்ணங்கள், என் மனதில் வளர்ந்து கொண்டிருந்தன.(பக். 35) பிச்சமூர்த்தியின் வெற்றிகள் புதுமைப்பித்தன் அளவுக்கு நேர்மையானவைதான். ஆனால், அவருடைய சரிவுகள், புதுமைப்பித்தனை விட சங்கடமானவை. (பக். 66). பண்டைத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பையோ அல்லது, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மேன்மையையோ வேறு மொழியினர் அறிந்து கொள்ளும் வகையில் எழுத்துத் துறைக்க ஆங்கில நூல் ஒன்றுகூட இல்லை. (பக். 167). என, இதுபோன்ற சிந்தனைக்கு விருந்தாகும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை. -குமரய்யா. நன்றி; தினமலர், 23/6/2013.
—-
பகவத் கீதை, சுவாமி ராமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 300ரூ.
பகவத் கீதை உளவியலின் ஊற்றுக்கண். கீதையின் உளவியல் கோட்பாடுகளைத் தனியே பிரித்தெடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கூறுகிறது இந்நூல். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள ஆழமான உளவியல் பார்வை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். திறமையுடனும், இசைபடவும் வாழ்வது குறித்த ஞானத்தை மகாபாரதம் வழங்குகிறது. உளவியல் செயல்பாடு குறித்த ஆழமான நூலாகவே இதைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வேண்டும். அரசு உரிமைக்காக பங்காளிகளான பாண்டவர்களும், கவுரவர்களம் போரிடுகிறார்கள். இந்தப் போரானது உலகியல் வளத்தையும், அதிகாரத்தையும் பெறுவதற்காக மட்டும் நடத்தப்பட்ட போர் அல்ல. நீதிக்கும் அநீதிக்கும், நன்மைக்கும் தீமைக்கம் இடையே நடைபெற்ற போர். நீதிக்கு பாண்டவர்களையும், அநீதிக்கு கவுரவர்களையும் காட்டப்படுகிறது. யுதிஷ்டிரர் தலைமையிலான பாண்டவர்களுக்கு ஆலோசகராகவும், தேரோட்டியாகவும் இருப்பதாகவும், துரியோதனன் தலைமையிலான கவுரவர்களுக்க பரந்த படைகளை தருவதாகவும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். போர்க்களத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கையாள்கிறது என்பதை எளிமையான விளக்க உரை மூலம் தெளிவுபடுத்துகிறார் சுவாமி ராமா. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.