பாம்பன் சுவாமிகள் பெருமை

பாம்பன் சுவாமிகள் பெருமை, முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், 4, வேங்கடேச அக்ரகாரம் சாலை, சென்னை 4, பக்கங்கள் 136, விலை 50ரூ.

அகத்தியர், நக்கீரர், அவ்வையார், அருணகிரிநாதருக்குப் பின் முருகன் அருள் பெற்று 6666 பாடல்களைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் இல்லற வாழ்வு, துறவற ஞானம் போன்ற வரலாற்று செய்திகளை, அவரது பாடல் ஆதாரங்களுடன் இந்நூலாசிரியர் அருமையாக, எளிமையாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். பாம்பனாரின் பாடல்கள், நூல்கள், பண்பு நலன்கள், அவரது அளவற்ற வடமொழி, தமிழ்ப்புலமை, அவரது பாடல்களில் பரவிக்கிடக்கும் இலக்கிய இன்பம் ஆகிய ஐந்து தலைப்புகளில் இந்நூல் பக்திப் புதையலாய் விளங்குகிறது. அவற்றில் சில 35 நாட்கள் சுடுகாட்டில் குழிக்குள் அமர்ந்து, தவம் செய்து முருகனைத் தரிசித்தார். சுவாமிகளின் இருமல் நோய், நோய்கட்டிகள், இடதுகால் எலும்பு முறிவு ஆகியவற்றை மருத்துவமனையாய் வந்து முருகனே குணப்படுத்தினார். – முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர் 22 ஜனவரி 2012.  

—-

 

பகவத் கீதை, மகாகவி பாரதியார், சீனி விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 600035.

பகவான் கிருஷ்ணன் அருளிச் செய்த பகவத் கீதையை மகாகவி பாரதியார் மொழி பெயர்த்து தமிழில் வழங்கியிருக்கிறார். இந்த புத்தகத்தை பாரதி நூல்களை சிறப்பாக வெளியிட்டு வரும் சீனி விசுவநாதன் பதிப்பித்திருக்கிறார். நல்ல விஷயத்தை, நல்ல பதிப்பாளர் நன்கு பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். – ஜனகன்.  

—-

 

பழமையான 108 சிவாலயங்கள் பயண வழிகாட்டி நூல், எம்.ஜி.ஸ்ரீனிவாசன், சியாமளா பதிப்பகம், 5/146 காமராசர் வீதி, மடிப்பாக்கம், சென்னை 91, பக்கங்கள் 176, விலை 100ரூ.

சைவத்தில் பற்றுடையவர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிறப்பான நூல். சுருக்கமாக சிவ தலம் அமைந்த இடம், ஆலயம் திறந்திருக்கும் நேரம் உட்பட, அர்த்தமுள்ள தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. வரைபடமும், இத்தலங்களின் சிறப்பும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நன்றி :தினமலர், 25 மார்ச் 2012.

Leave a Reply

Your email address will not be published.