சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்)
சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்), சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், ஜி 1, நாதன்ஸ் ஆகாஷ், 10, லட்சுமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக்கங்கள் 224, விலை 150ரூ.
சிவலிங்க தத்துவம், சிவ பூஜையின் பலன்கள், பஞ்சபூத தலங்கள், ஜோதிர்லிங்க ஆலயங்கள், சிவனாரின் மூன்று விரதங்கள் மற்றும் விசேஷங்கள், அன்னாபிஷேகத்தின் சிறப்பு, சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம் என அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த நூல், சிவனடியார்களுக்குப் பொக்கிஷம்.
—-
நவக்ரஹ தோஷங்களும் பரிகாரங்களும், ஹனுமத்தாசன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116,டி,பி,கோவில் தெரு, திருமலா ஃப்ளாட்ஸ், ஸ்ரீராகவேந்திர மடம் எதிரில், திருவல்லிக்கேணி, சென்னை 5, பக்கங்கள் 120, விலை 100ரூ.
நவக்கிரக தோஷங்கள் என்றால் என்ன, அந்த தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான விசேஷ தலங்கள், நவக்கிரகங்களுக்கு உரிய கோலங்கள் என நவக்கிரகங்கள் குறித்த அனைத்தையும் விவரமாகத் தந்துள்ளார் நூலாசிரியர்.
—-
ஸ்ரீ வைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம், உ.வே. ஸ்ரீராம ஐயங்கார், திருமால் பதிப்பகம், 20/53, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக்கங்கள் 134, விலை100ரூ.
அரங்கன் அளித்த வரம் ஸ்ரீபெருமாளை ஸேவிக்கும் முறை, ஸ்ரீ கிருஷ்ண மந்திரம், ஸ்ரீ கோவிந்த நாம மகிமை, அவதார மகிமைகள், ஸ்ரீ வேணுகானம் என திருமாலின் பெருமைகளையும் அவர்தம் அடியார்களின் பக்தியையும் பறைசாற்றுகிறது இந்த நூல். எளிமையாகத் தந்துள்ள விதம் சிறப்பு. நன்றி: சக்தி விகடன், 02 ஏப்ரல் 2013.