பகவத் கீதை
பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீபாலகங்கை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ.
மகாபாரதத்தில் முக்கியமான பகுதி பகவத்கீதை. போர்க்களத்தில், “உறவினர்களை கொன்று குவிப்பதா?” என்று சோர்வு அடையும் அர்ச்சுனனுக்கு கண்ணன் செய்யும் உபதேசமே பகவத்கீதை.
இதில், மனிதர்களின் கடமை, நீதி – அநீதி பற்றிய விளக்கம், மனித குலம் அறிய வேண்டிய உண்மைகள் யாவும் அடங்கியுள்ளன. பகவத் கீதையை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், எளிய – இனிய நடையில் எழுதியுள்ளார், புலவர் கோ. அருளாளன்.
நன்றி: தினத்தந்தி, 4/1/2017.