அன்னதானம்

அன்னதானம், இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர், இரா.கண்ணன், வெளியீடு: இரா.கண்ணன், பக்.644; விலை ரூ.1000. “தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்பது முதுமொழி. அன்னமே உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. உயிர்களின் பலமும் ஒளியும் எப்போதும் அன்னத்தாலேயே வளர்ச்சி பெறுகின்றன. அன்னம் தண்ணீரால் உண்டாகிறது. இத்தண்ணீரால் உண்டான அன்னம் இல்லையென்றால் உலகில் எதுவுமே இல்லை. அதனால்தான் இவ்விரண்டின் பெருமைகளையும் பீஷ்மர் (மகாபாரதத்தில்) எடுத்துரைக்கிறார். “பசியுடன் இருப்பவர்க்கு அன்னம் பாலித்தால் இறைவன் இருமடங்கு அருளை வழங்குகின்றான்’ என்கிறது நமது வேதம். “பசிப்பிணியால் வாடுகின்ற அனைவரும் அன்னதானம் ஏற்பதற்குரிய தகுதி […]

Read more

குடந்தைப் பகுதி சித்தர்கள்

குடந்தைப் பகுதி சித்தர்கள்,  இரா.கண்ணன், இரா.கண்ணன் வெளியீடு, பக்.380, விலை ரூ.250. தென்னாட்டில் திருக்கோயில்கள் அதிகமிருப்பது போலவே சித்தர்கள் சமாதிநிலை அடைந்த அதிஷ்டானங்களும் அதிகம் உள்ளன. கோயில் நகரம் என அறியப்படும் கும்பகோணம் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள முப்பத்தெட்டு சித்தர்களின் அதிஷ்டானங்கள் பற்றியும் அந்த சித்தர்கள் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் குறித்தும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாடறிந்த சித்தர்களான திருமூலர், பட்டினத்தார், பாடகச்சேரி சுவாமிகள், போதேந்திரர், ஸ்ரீதர ஐயாவாள் போன்றவர்களோடு நாம் அதிகம் அறிந்திராத மூட்டை சுவாமிகள், கத்தரிக்காய் சித்தர், புடலங்காய் […]

Read more