அன்னதானம்

அன்னதானம், இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர், இரா.கண்ணன், வெளியீடு: இரா.கண்ணன், பக்.644; விலை ரூ.1000. “தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்பது முதுமொழி. அன்னமே உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. உயிர்களின் பலமும் ஒளியும் எப்போதும் அன்னத்தாலேயே வளர்ச்சி பெறுகின்றன. அன்னம் தண்ணீரால் உண்டாகிறது. இத்தண்ணீரால் உண்டான அன்னம் இல்லையென்றால் உலகில் எதுவுமே இல்லை. அதனால்தான் இவ்விரண்டின் பெருமைகளையும் பீஷ்மர் (மகாபாரதத்தில்) எடுத்துரைக்கிறார். “பசியுடன் இருப்பவர்க்கு அன்னம் பாலித்தால் இறைவன் இருமடங்கு அருளை வழங்குகின்றான்’ என்கிறது நமது வேதம். “பசிப்பிணியால் வாடுகின்ற அனைவரும் அன்னதானம் ஏற்பதற்குரிய தகுதி […]

Read more