தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் உரையாசிரியர்கள் நோக்கு
தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் உரையாசிரியர்கள் நோக்கு, கு. முதற்பாவலர். முத்தமிழ் நிலையம், பக்.464, விலை ரூ.350.
தமிழ் யாப்பியலின் முந்தைய நிலையை எடுத்துரைப்பதாக தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ள ஒரு பகுதிதான் செய்யுளியல். இது பல்வேறு வகைகளாக யாப்பு வகைகளைக் கூறும் பகுதி. செய்யுளியலில் இடம்பெற்ற இலக்கணங்கள் பலவகையான மாற்றங்களையும், வளர்ச்சியையும் அடைந்து, பின்னாளில் தனித்தனி நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
யாப்பியல் தொடர்பாக அறிஞர் பலரும் ஆராய்ந்து அரிய பல தகவல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள் – வெளியிட்டும் வருகின்றனர். அச்சில் வராத யாப்பியல் ஆராய்ச்சி கூட வெளிவந்துள்ளது. காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள யாப்பியல் ஆராய்ச்சியில் இருந்து புதிதாகச் சிலவற்றை இந்நூல் ஆராய்ந்து எடுத்துரைக்கிறது. குறிப்பாக உரையாசிரியர்களின் நோக்கில் ஆராயும் இந்நூல் தொல்காப்பியச் செய்யுளியலும் உரைகளும் என்பதை முதல் பகுதியில் ஆராய்கிறது.
இரண்டாவது பகுதி அடி, யாப்பு, பா, அளவியல் ஆகிய உறுப்புகளை வடிவ உறுப்புகளாக வகைமை செய்து, தொல்காப்பிய உரைகளுடன் ஒப்புநோக்கி அவற்றை யாப்பருங்கல விருத்தியுரையுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து "வடிவ உறுப்புகள்; எனவும்; மூன்றாவது பகுதி தூக்கு, தொடை, வண்ணம் ஆகியன அடிப்படையிலும், பொருள் அடிப்படையிலும் ஒலி உறுப்புகள் என்ற தலைப்பிலும்; நான்காம் பகுதி மரபு, நோக்கு பற்றியும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, புலன், இயைபு, இழைபு ஆகிய எட்டு உறுப்புகள் கவிதையழகியலில் பெறும் இடத்தை விரிவாக வனப்பு1` என்கிற பகுதியிலும் ஆராய்ந்து ஆய்வாளர் ஆய்வு முடிவைத் தந்திருக்கிறார்.
தமிழ் இலக்கிய – இலக்கணம் கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கைவசம் இருக்க வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 26/7/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818