ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.125. ஒரு சிலர் குறித்து எத்தனை புத்தகங்கள் வெளிவந்தாலும் அத்தனையும் வாசகர்களின் வரவேற்பைப் பெறும். அவர்கள் குறித்த சம்பவங்களும், செயல்பாடுகளும் ஏற்படுத்தும் வியப்பு அத்தகையவை. மக்கள் மனதில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அதற்குக் காரணம். அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் தமிழகத்தால் கொண்டாடப்படும் ஜே.பி.சந்திரபாபு. சந்திரபாபு நடித்த திரைப்படங்கள் 70. அதில் 25 திரைப்படங்களில் அவரது பாடல்கள் இடம் பெறவில்லை. 45 படங்களில் 65 பாடல்களைப் பாடியிருக்கிறார். […]
Read more