ஆன்மிக ஒளியில் அறிவியல்

ஆன்மிக ஒளியில் அறிவியல், ப.திருமலை, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.240. அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்ற அனைத்தையுமே முன்னோர் ஒரு அர்த்தத்துடன் தான் செய்து வந்திருக்கின்றனர். நம் பழக்க வழக்கங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை மறந்து விட்டு, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம். இத்தகைய ஆன்மிக பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் முயற்சி தான் இந்த புத்தகம். முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கியது; மருந்துப் […]

Read more

கொரோனா உலகம்

கொரோனா உலகம், ப.திருமலை, தமிழர் ஆய்வு மையம், விலைரூ.150. இந்த நுால் கொரோனாவை மருத்துவ கண்ணோட்டத்தில் பார்ப்பதல்ல; மாறாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் கொரோனா காலத்தின் மீதான சமூக பார்வை. மட்டற்ற சுதந்திரத்தில் இருக்கும் உலகம், கொரோனா என்ற பேரிடரால் எப்படி முடங்கி, அடங்கிப் போனது; அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் என்ன; சமூக மாற்றங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் அலசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் திருமலை. கொரோனா காலத்தின் செய்தி தொகுப்பாக அல்ல; நிகழ்காலத்தின் கண்ணாடியாக நுாலை தந்திருப்பதால், காலம் கடந்தும் […]

Read more

எங்கெங்கும் மாசுகளாய்…

எங்கெங்கும் மாசுகளாய்…, மண் முதல் விண் வரை (சூழலியல் கட்டுரைகள்), ப.திருமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை ரூ.110. சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; ஆனால், மனிதர்கள் இதனை மறந்து இயற்கைக்கு எதிரான செயல்களில் கட்டுப்பாடின்றி ஈடுபடுவதால் கடுமையான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என அழுத்தமாக உரைக்கிறது நூல். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பாரீஸ் பருவநிலை மாநாட்டின் தீர்மானங்களை எத்தனை […]

Read more

நீர்–நேற்று, இன்று, நாளை?

நீர்–நேற்று, இன்று, நாளை?, ப.திருமலை, மண் மக்கள் மனிதம், விலைரூ.160. இன்றைய உலகின் அவசரத்தேவையும், சிக்கனமாக நாம் பயன்படுத்த வேண்டியதும் நீர் அன்றி வேறில்லை. நீரின்றி அமையாது உலகு. அது எப்படி என்று விளக்க இந்த நூலின் 21 கட்டுரைகள் போதும். மூத்த பத்திரிகையாளரான திருமலை நம் நாட்டின் ‘நீர் அரசியல்’ பற்றி, கேரளா, கர்நாடகாவிடம் நமக்கு நடக்கும் தண்ணீர் போர் பற்றி அருமையாக மூன்று கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார். கண்மாய்கள், ஆறுகளை காக்கும் அற்புத வழிகள், குடிநீரின் தேவை, நீர் மாசு என […]

Read more