வாழ்க்கை எனப்படுவது யாதெனின்

வாழ்க்கை எனப்படுவது யாதெனின், இரா.சாந்தகுமார், இரா.சாந்தகுமார் வெளியீடு, விலை 50ரூ. 33 புதுக்கவிதைகளை இந்த நூல் தாங்கி இருக்கிறது. டாலர் மோகம், ஒன்பது உயர்ந்ததே, பிறப்பொக்கும் அரவாணிகளுக்கும் என்ற கவிதைகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திரை உலகில் செல்வி ஜெயலலிதா

திரை உலகில் செல்வி ஜெயலலிதா, கவிஞர் பொன்.செல்லமுத்து,  வைகுந்த்பதிப்பகம்,  பக்.792,  விலை ரூ.950. விரல் நுனியில் சினிமா என்று சொல்வதற்கு ஓர் எடுத்துக்காட்டு கவிஞர் பொன்.செல்லமுத்து. தமிழ் சினிமா குறித்தும், திரைப்படங்கள் குறித்தும், திரையிசைக் கவிஞர்கள் குறித்தும் அவர் செய்திருக்கும் ஆய்வுகள் குறித்துக் கேட்டால் நமக்கே தலைசுற்றும். அந்த அளவுக்கு எல்லாமே அவருக்கு அத்துப்படி. தமிழ் சினிமா குறித்து கவிஞர் பொன். செல்லமுத்து இதுவரை தொகுத்திருக்கும் புத்தகங்கள் 14. எழுதியிருக்கும் புத்தகங்கள் 12. இப்போது 15 ஆவது தொகுப்பாக அவர் வெளிக் கொணர்ந்திருக்கும் புத்தகம் […]

Read more

கிணற்றுக்குள் காவிரி

கிணற்றுக்குள் காவிரி , ஜெ. பாஸ்கரன், பவித்ரா பதிப்பகம்,  பக்.146, விலை ரூ.160. நூலாசிரியர் ஜெ. பாஸ்கரன், அடிப்படையில் நரம்பியல் மருத்துவர். பல்வேறு பருவ இதழ்களில் அவர் எழுதிய 21 சிறுகதைகளின் தொகுப்புதான் "கிணற்றுக்குள் காவிரி'. ஏழாவது சிறுகதை கிணற்றுக்குள் காவிரி. அத்தனைக் கதைகளும் முத்தான கதைகள். இயல்பான மொழியில் (ஓரிரு மருத்துவச் சொல்லாடல்கள் தவிர) நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் கதைகள் அவை. பெரும்பாலானவை பெண்களை மையப்படுத்திய சிறுகதைகளே. ஒவ்வொன்றும் வெவ்வேறு சமூகத் தளத்தில் பயணிக்கின்றன. இந்தக் கதை எப்படி முடியப் போகிறது […]

Read more

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. இறைவனின் அன்பு எல்லையில்லாதது. படித்தவர், உயர்குலத்தவர் என்றெல்லாம் இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; பெறுவதும் இல்லை. எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான் இறைவனை மனித உடலுக்கு ஒன்றச் செய்கிறது. அதிலுள்ள உயிரை உருக்கி தன்னை நோக்கி வரச் செய்கிறது. படிக்காவிட்டாலும் எளிமையான காளி பக்தியால் தன்னை உயர்த்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய வரலாறு இது. காளியின் அருளால் அனைத்து மதங்களின் சாராம்சங்களையும் முழுமையாக அறிந்தவர். அனைத்தும் காட்டும் வழி ஒன்றே […]

Read more

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென்

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலைரூ.360. நுட்பமான பொருளை உணர்த்துவது ஜென் தத்துவமும், அதை தாங்கி நிற்கும் சிறுகதைகளும். அமைதி, ஒற்றுமை, கருணை, சமத்துவத்தை போதிப்பது, சூபியிசம். கருணை, அடக்கம், பணிவு போன்ற மகத்தான அறங்களை எளிய கோட்பாடாக விளக்குவது தாவோயிசம். இந்த மூன்று உயர் நெறிகளையும் அறிந்து சிந்தனை தெளிவுடன் பகிர்ந்துள்ள நுால். மனதின் நுண்ணிய ஆற்றலை மேம்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மூன்று தத்துவங்களும் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தத்துவத்திலும் ஆர்வமுள்ள […]

Read more

ஓம் சக்தி!

ஓம் சக்தி! தமிழக சக்தி பீடங்கள், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டு உள்ளது. அனைத்திற்கும் ஆதியானவள் அன்னை காமாட்சி காஞ்சியிலே குடியிருக்கும் விதம், ஆதிசங்கரர் கோவிலை அமைத்த விதம், தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காத்தருளிய கருணை ஆகியவற்றை ஆசிரியர் பிரபுசங்கர் குறிப்பிடுகிறார். அன்னை காமாட்சியின் அருள் கிடைப்பதற்கான ஸ்லோகங்களையும் விவரிக்கிறார். இரண்டாவதாக அன்னை மீனாட்சியின் அருளை புத்தகத்தில் வாரி வழங்குகிறார். அன்னையின் வரலாறு, மதுரையின் […]

Read more

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு, ஜெய்ராம் ரமேஷ், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.295 பிரபல கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ‘முகில் மீது தனியாய் திரிந்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையுடன் துவங்குகிறது இந்த நுால். மறைந்த பிரதமர் இந்திரா விரும்பிய கவிதைகளில் இதுவும் ஒன்று.இயற்கை மீது இந்திராவின் பேரார்வத்தை வெளிப்படுத்தும் தகவல்கள் கொண்ட நுால் இது. அவருக்கு, இயற்கை மீதான அக்கறை எங்கிருந்து வந்தது, எவ்விதம் வளர்ந்தது, எவ்வாறு பிரதிபலித்தது, சூழலியல் நலனில் எடுத்த முடிவுகள் என்ன போன்றவற்றுக்கு விடை தரும் வகையில், உரிய […]

Read more

ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?

ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.200. ‘டெலஸ்கோப்’ பார்த்திருக்கீங்களா? ‘இல்லை… எனக்கு, ‘பைனாக்குலர்’ தான் தெரியும்… மொட்டை மாடியிலிருந்து, நாலு தெரு தள்ளி இருக்கிற வீட்டின் ஜன்னல் வழியே, உள்ளே உத்துப் பார்ப்பேன்…’ என, வாயிலிருக்கும் 32ம் தெரிய சிரிக்கிறீங்களா… நீங்களாக எழுதி வைத்துள்ள உங்கள் தலைச் சுழி அப்படி! அப்படி உத்துப் பார்த்து நீங்கள், ‘வாங்கி’க் கட்டிக் கொண்டால், அதுவும் உங்கள் தலைச் சுழியே!‘டெலஸ்கோப் வாங்கத் தோணவில்லை; பைனாக்குலர் வாங்கும் வரை தான் அறிவு இருக்கிறது’ என்பதெல்லாம், நீங்களாகவே, […]

Read more

அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம்

அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம், முனைவர் அ. அன்பாநந்தன், அறம் பதிப்பகம், விலை 50ரூ. ஈ.வெ.ரா. பெரியாருக்கு முன்னதாக அயோத்திதாசப் பண்டிதர், தமிழ் எழுத்துக்களில் கொண்டு வந்த சீர்திருத்தத்தை ஆய்வு நோக்கில் இந்த நூல் தந்து இருக்கிறது. தற்போதைய தமிழ் எழுத்து, ‘தமிழி’ மற்றும் ‘வட்டெழுத்து’ மூலம் எவ்வாறு உருவானது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சொல்லாத சொல்

சொல்லாத சொல் , மாலன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.248, விலை ரூ.160. துக்ளக் வார இதழில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 செப்டம்பர் முதல் வாரம் வரை எழுதிய 49 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அந்த ஓராண்டில் தமிழகத்தில், இந்தியாவில், உலகில் நடைபெற்ற அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த சுருக்கமானபதிவுகளே இக்கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரைக்கும் தொடக்கமாக அக்கட்டுரை கருத்துகளின் குறியீடாக ஒரு சின்னஞ்சிறு கதையை வைத்திருக்கிறார் நூலாசிரியர். தெரிந்த கதைகள் சிலவும், தெரியாத கதைகள் பலவும் இருந்தாலும் அனைத்துமே ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையிலும் […]

Read more
1 2 3 4 5 8