சொல்லாத சொல்
சொல்லாத சொல் , மாலன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.248, விலை ரூ.160.
துக்ளக் வார இதழில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 செப்டம்பர் முதல் வாரம் வரை எழுதிய 49 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
அந்த ஓராண்டில் தமிழகத்தில், இந்தியாவில், உலகில் நடைபெற்ற அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த சுருக்கமானபதிவுகளே இக்கட்டுரைகள்.
ஒவ்வொரு கட்டுரைக்கும் தொடக்கமாக அக்கட்டுரை கருத்துகளின் குறியீடாக ஒரு சின்னஞ்சிறு கதையை வைத்திருக்கிறார் நூலாசிரியர். தெரிந்த கதைகள் சிலவும், தெரியாத கதைகள் பலவும் இருந்தாலும் அனைத்துமே ரசிக்கும்படியாக இருக்கின்றன.
ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு நிகழ்வை விரிவாக அலசியிருப்பதோடு, அதனோடு தொடர்புடைய புள்ளிவிவரத் தகவல்களையும் முன்வைக்கிறார்.
குறிப்பாக, கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது அல்ல என்று கூறிய ப.சிதம்பரத்தின் கருத்தை மறுக்கும் நூலாசிரியர், கச்சத்தீவின் வரலாற்றையே விளக்கியுள்ளார் (கச்சத்தீவு: சிதம்பரத்திற்கு சில கேள்விகள்).
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, மதுவிலக்கு குறித்த சட்டப்பிரிவுக்கு எதிர்ப்பு வலுத்தபோது, "இவை அரசுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்தான். இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கட்டாயமில்லை என்று அம்பேத்கர் கூறியது வியப்பான செய்தி (யாருக்கும் வெட்கமில்லை).
அதுபோன்றே மும்மொழித் திட்டத்தை நாங்கள் ஏற்கத் தயார்தான். ஆனால் மற்ற ராஜ்யங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று அண்ணாதுரை கூறியதும் பலரும் அறிந்திராத புதிய செய்தி (மும்மொழித் திட்டத்தை ஏற்கத் தயார் என்றார் அண்ணா).
வெவ்வேறு மனிதர்கள் தொடர்புடைய நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பினும், எல்லாமே சுவையாக அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 12/7/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031373_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818