விவேகானந்தம்

விவேகானந்தம், சுஜாதன், காவ்யா, விலைரூ.350. இந்திய பண்பாட்டின் ஞான ஒளி கோபுரம் என அழைக்கப்படுபவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். மலையாள மூலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து உள்ளார், ப.விமலா. இந்த பூ உலகில், 39 ஆண்டுகளே வாழ்ந்தார் விவேகானந்தர். அடிப்படை வளர்ச்சிகள் கூட காணாத காலக்கட்டத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து, ஞானம் பெற்றவர்; வெளிநாடுகளிலும் பயணம் செய்து ஞானத்தை பரப்பியுள்ளார். அந்த மகத்தான பயணங்களையும், அதன் அடியொற்றிய வாழ்க்கையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது […]

Read more

விவேகானந்தம்

விவேகானந்தம், எஸ்.சுஜாதன், தமிழில்: ப.விமலா, காவ்யா, பக். 320, விலை ரூ. 350. மலையாளத்தில் எழுதப்பட்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே விவேகானந்தம். இந்து மதத்தின் சாராம்சங்களை இந்தியாவுக்குள் மட்டுமன்றி மேற்கத்திய நாடுகளிலும் சுவாமி விவேகானந்தர் பரப்புரை செய்தார். இந்தியா, வெளிநாடுகளில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சுமார் ஆறு வருடப் பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை இந்த நாவல் பதிவு செய்துள்ளது.தீவிர இந்து மதப் பற்றாளரான சுவாமி விவேகானந்தர் பிற மதங்களிலுள்ள நல்ல பல கருத்துகளை தயங்காமல் ஏற்றுக்கொண்டார். […]

Read more