கல்கியின் சிறுகதை
கல்கியின் சிறுகதை, பாகம் 2, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 640, விலை 345ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-226-7.html
புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை என பன்முகத்திறமைகளைப் பெற்றிருந்ததோடு, வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும், விளங்கிய கல்கியின் 40 சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் பாங்கர் விநாயக ராவ் என்ற நாடகமும் இ8ணைக்கப்பட்டுள்ளது. தேவகியின் கணவன், பவானி பி.ஏ.பி.எல்., புன்னை வனத்துப் புலி, மாடத்தேவன் சனை போன்றவை நீண்ட சிறுகதைகளாகும். விடுதலைப் போரில் நேதாஜியின் வீரதீரங்களை நினைவுகூரும் அமர வாழ்வு துவங்கி, கலிபுராணத்தில் நாட்டுப் படலத்துக்கும் நகரப் படலத்துக்கும் அடுத்தபடியான வீட்டுப் படலம் என்று வீடு தேடும் படலம் ஈறாக உள்ள கதைகள் யாவுமே சுவாரசியமாக அமைந்துள்ளன. கல்கி காலத்திரய சூழ்நிலையில் எழுதப்பட்டவை என்பதால், அன்றைய அரசியலும் இழையோடுவது சிறப்பாக உள்ளது. படித்து இன்புறத்தக்கவை. -பின்னலூரான். நன்றி: தினமலர், 13/4/2014,