சங்கீத மும்மூர்த்திகள்
சங்கீத மும்மூர்த்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக். 80, விலை 75ரூ.
இசையால், இறைவனை இசைய வைத்து, இறைவனை மட்டுமல்லாமல் கேட்பவர் அனைவரையும் அன்றும் இன்றும் என்றும் பரவசப்படுத்த முடிந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரது வாழ்க்கைச் சரிதங்களை எத்தனைபேர் எழுதி, எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது. அந்த வகையில் இந்நூலாசிரியர், அவர்களது சரிதங்களை, மிக எளிய அழகான முறையில், அற்புதமாக எழுதியிருக்கிறார். இத்துடன் தியாகராஜ சுவாமிகளிடம் அபார பக்திபூண்டு ஒழுகிய ஸ்ரீமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பும் உண்டு. சங்கீத ரசிகர்கள் அவசியம் படித்து, ரசிக்க வேண்டிய நூல். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 13/4/2014.
—-