தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம், துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, பக். 291, விலை 300ரூ. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் களப்பிரரே. பாண்டிய வேந்தர்கள் இல்லை என்றும் களப்பிரர் வந்தேறி இனக்குழுவினர் என்றும், பாண்டியர் இனக்குழுவினரை அகற்றி அரசு உருவாக்கியவர்கள் என்றும், பல ஆதாரங்களுடன் பேசும் நூல். ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்பிரமணியன் சுவாமி; தமிழில்: சேக்கிழான், பக்.260, கிழக்கு பதிப்பகம், சென்னை – 14. விலை ரூ.195 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-703-9.html 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து இன்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஓரளவு தெரியும். ஆனாலும், இந்த ஊழல் எப்படி நடந்தது, எந்தெந்த தருணங்களில் அம்பலப்பட்டது, யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போனது குறித்து விவரமாகத் தெரிந்தவர்கள் மிகச் சிலர்தான். தற்போதைய இந்த மொழிபெயர்ப்பு – இந்த ஊழலை மிக நுட்பமாகவும் ஊழலின் […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, முனைவர் துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, சென்னை – 42, விலை 700 ரூ. தமிழின் தொன்மையான சங்கப்பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புறப்பாடல்களே. இவை பாணர்களோ, புலவர்களோ பாடியது அல்ல. அவை அனைத்தும் மக்கள் பாடியவை. சங்ககாலப் புலவர்கள் எனக் கூறப்படும் புலவர் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. சமணர்கள் தமிழகம் வந்து தங்கள் மதத்தைப் பரப்ப முற்பட்டபோது மக்கள் (தமிழ்) மொழியில் புழங்கிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். இதுவே பின்னர் சங்க இலக்கியம் என அழைக்கப்பெற்றது. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, நெடுந்தொகை […]

Read more