ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று […]

Read more

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18, விலை 40 ரூ. உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் அதிர்ச்சித் தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல்,ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் விவகாரத்தின் முழுமையான பின்னணியை […]

Read more

தமிழர் உணவு

தமிழர் உணவு, தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கம் 415, விலை 250ரூ. பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமூகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி. ஈழத்தில் […]

Read more

கம்பனும் ஆழ்வார்களும்

கம்பனும் ஆழ்வார்களும், ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, பக்கம் 312, விலை 180 ரூ.   வைணவத் தமிழ் வளர்த்த முதலாமவர் ஆழ்வார்கள். கம்பன் அவர்க்குப் பின்னே அக்கடனைச் செய்தார். இருப்பினும், ஆழ்வார்களின் சொற்சுவையும் கம்பனின் கவிச்சுவையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. வைணவத் தமிழ்ச் சுவை சரளமாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது. இதில், கம்பனும் ஆழ்வார்களும் ஒப்புமை காணப்பெறுகிறார்கள். அடுத்து பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரர், திருமங்கை மன்னர், நம்மாழ்வார் என இவர்களின் […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

  இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக்நகர், சென்னை – 600083, விலை 60 ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிகளை அவர்களிடம் இருந்து கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல். […]

Read more

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும்

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும், விந்தன், தோழமை வெளியீடு, 5 டி, பொன்னம்பலம் சாலை, கே. கே. நகர், சென்னை – 78, விலை 80 ரூ. பெரியாருக்கு சினிமா பிடிக்காது. அவருக்குப் பிடித்த சினிமாக்காரர் எம்.ஆர்.ராதா. ராதா தன்னுடைய வாழ்க்கையை சினிமாவுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அவருக்கு சினிமாக்காரர்களைப் பிடிக்காது. காரணம், அவர்களிடம் இருந்த போலித்தனம். அந்த போலித்தனம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர்தான் ராதா. “வீட்டிலே சோறில்லை. டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும்  சுருக்கமாச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் […]

Read more

பிரதமர் புரந்தரதாசர்

நெஞ்சில் பூத்த நெருப்புத் தாமரை, சுப. ஸ்ரீ. சுப்ரமணியன், சுபஸ்ரீ பதிப்பகம், 12, நால்வர் தெரு, கணபதிபுரம், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600059, பக்கம் 92, விலை 45ரூ.   வாழ்வியல் கவிஞரின் கவிதைப் படைப்புகள், பாவம், ‘அரசியலை வெறுக்கும் இவர் வட்டமோ, நகரமோ, சதுரமோ, மாவட்டமோ, எந்தப் பரிவட்டமும் வேண்டாம்’ என்ற இவரது கவிதை வரிகள் அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.   — பிரதமர் புரந்தரதாசர், தஞ்சை வி. நாராயணசாமி, திருவரசு புத்தகம் நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், […]

Read more

இதயம் காப்பது எளிது

ஸ்ரீராமாநுச நூற்றந்தாதி, தி. பாஷ்ய ராமாநுசதாசன், விக்னேஷ் வெளியீடு, 26 – நியூ காலனி, ஜோசியர் தெரு, சென்னை – 34, பக்கம் 160, விலை 100 ரூ.   வைணவர்கள் தலைவணங்கிப் போற்றும் தூய தலைவர் ராமாநுசர். அவரைப் போற்றி, திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த அந்தாதி நூல் இது. இந்நூலில் 108 பாடல்கள் அந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளன. உரையாசிரியர் வைணவக் கொள்கைகளைப் பரப்பும் பணியினை மேற்கொண்டவர். ராமாநுசர் பெயரால் அவர் பிறந்த ஸ்ரீபெரும்புதூரில் நுழைவுவாயில்கள் அமைத்தவர். வைணவக் கொள்கைகளில் தெளிந்த அறிவு கொண்டு ஆழங்கால்பட்டவர், […]

Read more

உயிரே உனக்காக

உயிரே உனக்காக, எ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண். 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை – 17, பக்கம் 432, விலை 250 ரூ.   புதினங்கள், கட்டுரை எழுதுவதில் தனக்கென புதிய பாணியைப் படைத்து வாசகர் நெஞ்சில் இடம் பெற்றவர் நூல் ஆசிரியர். தினமலர் வாரமலரில் ஓராண்டுக்கும் மேலாக வெளிவந்த இந்தக் கதைக் கரு பலரது மனதை ஈர்த்திருக்கிறது. ஆசிரியர் நட்பு வட்டாரம் அளப்பரியது. ஆழமான மனவியல் உணர்வுகளை இதில் வரும் பாத்திரப்படைப்புகளில் எளிய தமிழில் புரிய வைத்திருக்கிறார். […]

Read more

வ.உ.சி. பற்றி ம.பொ.சி.

வ.உ.சி. பற்றி ம.பொ.சி., சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், தொகுத்தவர்- ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. பதிப்பகம், பதிவு எண் 482/2010, 4/344 ஏ, சீஷெல் அவென்யூ, அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை – 41, பக்கம் 97, விலை 65 ரூ. வ.உ.சி. யை என் அரசியல் தந்தை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பெருமைபடக் கூறுவார். அவர் எத்தனையோ நூல்களை எழுதியிருந்தாலும், முதன் முதலில் எழுதி வெளியிட்ட நூல், கப்பலோட்டிய தமிழர் என்பதுதான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதற்காக […]

Read more
1 2 3 4 5 6