இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 60ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிக, அவர்களிடம் இருந்து கண்டதையும், கேட்டதையும், பார்த்ததையும், கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.   —- […]

Read more

பாரதியார் கதைக் களஞ்சியம்

பாரதியார் கதைக் களஞ்சியம், தொகுப்பு – டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை -35, பக்கங்கள் 816 விலை 350ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-8.html பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும் ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி. சந்திரிகையின் கதை என்னும் நாவல், நவதந்திர கதைகள் என்னும் தொகுப்பு முதலாக, எல்லாக் கதை படைப்புகளையும் தொகுத்திருப்பதோடு, அவர் எழுதிய ஆங்கிலக் கதையையும் இணைத்திருப்பது நூலாசிரியரின் தொகுப்புக்கு முத்தாய்ப்பு வைக்கிறது. […]

Read more

கம்பனும் ஆழ்வார்களும்

கம்பனும் ஆழ்வார்களும், ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, பக்கம் 312, விலை 180 ரூ.   வைணவத் தமிழ் வளர்த்த முதலாமவர் ஆழ்வார்கள். கம்பன் அவர்க்குப் பின்னே அக்கடனைச் செய்தார். இருப்பினும், ஆழ்வார்களின் சொற்சுவையும் கம்பனின் கவிச்சுவையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. வைணவத் தமிழ்ச் சுவை சரளமாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது. இதில், கம்பனும் ஆழ்வார்களும் ஒப்புமை காணப்பெறுகிறார்கள். அடுத்து பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரர், திருமங்கை மன்னர், நம்மாழ்வார் என இவர்களின் […]

Read more