இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி
இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 60ரூ.
தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிக, அவர்களிடம் இருந்து கண்டதையும், கேட்டதையும், பார்த்ததையும், கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.
—-
உடல் நலம் காக்க உன்னத வழிகள், டாக்டர் பெ. போத்தி, விகடன் பிரசுரம், விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-841-3.html
வணிகமயமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் நோய் நொடியின்றி வாழ விரும்பும் அன்பர்களுக்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றக்கூடிய எளிய பயிற்சிகளை இந்நூல் விளக்குகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் முன்னோர் வாக்கை எளிய வழியில் எடுத்துச் சொல்கிறது. நன்றி : கல்கி, 17, ஜுலை 2011.
—-
கம்பனும் ஆழ்வார்களும், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை1, பக்கங்கள் 312, விலை 180ரூ.
வைணவத் தமிழ் வளர்த்த முதலாமவர் ஆழ்வார்கள். கம்பன் அவர்க்குப் பின்னே அக்கடனைச் செய்தார். இருப்பினும் ஆழ்வார்களின் சொற்சுவையும் கம்பனின் கவிச்சுவையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. வைணவத் தமிழ்ச் சுவை சரளமாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து நூல் எங்கும் விரவிக்கிடக்கிறது. இதில் கம்பனும் ஆழ்வார்களும் ஒப்புமை காணப்பெறுகிறார்கள். அடுத்து பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரர், திருமங்கை மன்னர், நம்மாழ்வார் என இவர்களின் பாசுரங்களோடு கம்பனின் கவித்திறம் ஒப்புநோக்கப்பட்டுள்ளது சிறப்பு. இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே என்று நம்மாழ்வார் கூறுவதுபோல் கடவுள் வணக்கத்தில் கம்பன் அலகிலா விளையாட்டுடையான் என்கிறார். ராமனை நினைத்து மனத்துக்கினியான் என்று ஆண்டாள் கூறுதல்போல் கம்பனும் அவன் நாமம் பேசுகிறார். சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய் என்று ஆண்டாள் சொல்ல, கம்பனும் வைணவ உரையாசிரியர்களும் காலம்தோறும் கம்பன் முதலிய கட்டுரைகள் மனதைத் தொடுகின்றன. இந்த நூலைப் படித்து முடிக்கையில் தமிழ்க் கவியமுதம் நெஞ்சில் நீங்காது இழையோடுகிறது. உவமை நயத்தையும் நல்ல தமிழையும் சுவாசிக்க விரும்புவோருக்கு இது பிராண வாயு. நன்றி: தினத்தந்தி, 19 மார்ச் 2012.