சட்டமேதை அம்பேத்கர் 100

சட்டமேதை அம்பேத்கர் 100, ஆர்.சி.மதிராஜ், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 112, டெம்மி விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-1.html

குழந்தைப் பருவத்திலேயே தீண்டாமைத் தீ இதயத்தை கருக்கிய கொடுமை. தன்னைப் போன்று யாரையும் விளையும் பருவத்திலேயே வெந்து கருக விட்டுவிடக்கூடாது என்கிற லட்சிய வெறியோடு வாழ்ந்த பீமாராவ் அம்பேத்கருடைய சுய அனுபவங்கள் கொள்கைகளின் தொகுப்பே சட்டமேதை அம்பேத்கர் 100 என்ற இந்த நூல். ஆசிரியரின் எழுத்தாற்றல் இந்த நூலில் பளிச்சென தெரிகிறது.  

—-

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 100, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 200, டெம்மி விலை 125ரூ.

சுதந்திர போராட்டத்தில் இந்தியர் ஈடுபட்டபோது, அந்த வேதனைக் குரல் காதில் கேட்டு விடாதபடி காதை பொத்திக் கொண்டவர் பலர். காதில் வாங்கி மறு காதில் விட்டவர் பலர். அது நெஞ்சிலே தைத்தும் ஆட்சியாளரின் மிரட்டலுக்கு பயந்து வாளாவிருந்தனர் பலர். அந்த சூழ்நிலையில் நெஞ்சை நிமிர்த்தி அன்னையின் விடுதலைக்கு குரல் கொடுக்கத் துணிந்தவர் சிலர். அவர்களின் முதன்மை நாயகன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர் வாழ்வில் நடைபெற்ற சுவையான 100 சம்பவங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. -எஸ். திருமலை. நன்றி: தினமலர், 26 பிப்ரவரி 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *