உரை மாண்புகள்

உரை மாண்புகள், இரா. குமரவேலன், விழிகள் பதிப்பகம், 8ஏம், 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41. பக். 160, விலை 130ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார், திருக்குறள் பரிமேலழகர், திருக்குகோவையார் பேராசிரியர், இவ்வாறு அறிஞர் பெருமக்கள் மனதில் பதிந்துவிட்ட உரை (உண்மை)கள் இவை. அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரைக்கு முன்பே அரும்பதவுரை ஒன்று இருந்துள்ளது. ஆனால் அடியார்க்கு நல்லார் உரைதான் விரிவானதாக விளங்குகிறது. இதைப் பற்றி ஆராய்கிறது அடியார்க்குநல்லார் உரைநலம் […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 60ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிக, அவர்களிடம் இருந்து கண்டதையும், கேட்டதையும், பார்த்ததையும், கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.   —- […]

Read more