உரை மாண்புகள்

உரை மாண்புகள், இரா. குமரவேலன், விழிகள் பதிப்பகம், 8ஏம், 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41. பக். 160, விலை 130ரூ.

கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார், திருக்குறள் பரிமேலழகர், திருக்குகோவையார் பேராசிரியர், இவ்வாறு அறிஞர் பெருமக்கள் மனதில் பதிந்துவிட்ட உரை (உண்மை)கள் இவை. அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரைக்கு முன்பே அரும்பதவுரை ஒன்று இருந்துள்ளது. ஆனால் அடியார்க்கு நல்லார் உரைதான் விரிவானதாக விளங்குகிறது. இதைப் பற்றி ஆராய்கிறது அடியார்க்குநல்லார் உரைநலம் என்ற கட்டுரை. மாணிக்கவாசகரின் திருக்கோவையாருக்கு (திருச்சிறம்பலக் கோவை) உரை எழுதிய பேராசிரியர் உரைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பழைய உரை ஒன்று இருப்பதாகவும், அதை இன்றளவும் பலர் அறியாது உள்ளனர் என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், இப்பேராசிரியர் ஓர் இலக்கிய உரையாசிரியராக அமைந்து விளக்கங்களைத் தந்துள்ளார். ஆனால் பழைய உரையாசிரியரின் உரையில் பக்தி உணர்வு மேலோங்கி இருக்கிறது. இதுவே இரண்டிற்குமிடையே அமைந்துள்ள அடிப்படை வேற்றுமை என்பதை சிற்றம்பலக்கோவை, பழைய உரையில் விளக்கியுள்ளார். ஒரு நூல் காலம் காலமாக மக்களிடையே வழங்கி வருமானால் பாட வேறுபாடுகள் (பாட பேதம்) ஏற்படுவது இயல்புதான். அவ்வகையில் திருக்குறளிலும் நிறைய பாடவேறுபாடுகள் உள்ளன. ஆனால் இதைப் பற்றி அறிஞர் பலரும் அக்கறை காட்டுவதில்லை என்று கூறும் நூலாசிரியரின் ஆதங்கத்தில் உருவானதுதான் திருக்குறளில் பாட வேறுபாடுகள் என்ற கட்டுரை. மேலும் வ.உ.சியின் திருக்குறள் உரை, காமத்துப்பால் கூற்று, கிளவி வேறுபாடுகள், நெடுநல்வாடை, தக்கயாகபரணி உரை என உரை நூல்களை (பழைய புதிய) மீள்பார்வை செய்து, இன்றைக்கும் பொருந்தும் வகையில் பல அரிய செய்திகளைச் சேர்த்துத் தந்துள்ளார்.ஆய்வாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் பயன் தரக்கூடிய நூல். நன்றி: தினமணி,26/8/2013.  

—-

 

உடல் நலம் காக்க உன்னத வழிகள், டாக்டர் பெ. போத்தி, விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை 2, பக். 192, விலை 80ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-841-3.html

நோயை அறிய, நோயைத் தடுக்க, நோயின்றி வாழ, உன்னத வழிகள். குடல்புழு, புகைப்பிடித்தல், நாய்க்கடி, வாந்தி, மூட்டுவலி, முதுகுவலி, எயிட்ஸ் (பாலியல்நோய்) எனப் பல தலைப்புகளில் பேசுகிறார் டாக்டர். உள்ளத்தை இறுக்கமின்றி வைத்துக்கொள்ளுதல், தகுந்த நோய்த் தடுப்பு முறைகளைக் கையாளுதல் போன்ற, கருத்துகளையும் தெளிவுபடுத்தியுள்ளார். -எஸ். குரு. நன்றி; தினமலர், 6/11/2011    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *