கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்

கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்,  ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தகநிலையம், பக்.200, விலை ரூ.180; கம்பராமாயணம் தொடர்பான ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஏழாவது கட்டுரையான கம்பனும் பாரதிதாசனும் கட்டுரை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை பழமைச் சிமிழுக்குள் அடைக்கும் முயற்சி என்று ஐயப்படுகிறவர்களுக்கு விளக்கம் அளிக்கும் முயற்சியான பின்னுரை, எட்டாவது கட்டுரையாகத் தோன்றிவிட்டது. கம்பராமாயணம் இன்று வரை போற்றப்படுவதற்குக் காரணம் அதன் உலகியல் அடித்தளமே என்பதை விளக்கும் கம்பனில் உலகியல் கட்டுரை, கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிடுகிற சில பொருள்களை வைத்து, அவர் குறிப்பிடுவது திருமாலிருஞ்சோலை, […]

Read more

பெரியாழ்வார்

பெரியாழ்வார், ம.பெ.சீனிவாசன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் மொழியில் தோன்றியது போல் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அதிகமான பக்தி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. பக்தி இலக்கியத்தின் தொடக்கம் சங்ககாலத்திலேயே அறியப்பட்டாலும் நாயன்மார், ஆழ்வார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. அதிலும் பன்னிரு ஆழ்வார்களின் படைப்புகள் திருமாலின் பெருமையைப் பாடிச் செல்வதால் ஆழ்வார்களை மால் உகந்த ஆசிரியர் என்று அழைப்பர். அவர்களுள் பெரியாழ்வாரின் படைப்புகளையும் அதன் தனிச் சிறப்புகளையும் பற்றிப் பேசுவதுதான் இந்நூல். அறிமுகம் , வாழ்க்கையும் படைப்பும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் […]

Read more

கம்பனில் சங்க இலக்கியம்

கம்பனில் சங்க இலக்கியம், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 304, விலை 200ரூ. கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில், ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் சான்றோர் என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் சான்றோர் […]

Read more

வண்டாடப் பூ மலர

வண்டாடப் பூ மலர, ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 208, விலை 125ரூ. வண்டாடப் பூ மலர என்ற நூலின் தலைப்பே மிகவும் இலக்கிய நயமாகவும், உச்சரிக்கும்போது இனிமையாகவும் இருப்பதை உணர முடிகிறது. அதைப்போலவே நூலில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் இலக்கிய ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருப்பது, மிகச் சிறப்பானதாக உள்ளது. சாமானியர்களின் வாய்மொழிப்பாடல்கள் எப்படி சங்க இலக்கியவாதிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை முதல் கட்டுரையின் மூலம் ஆசிரியர் மிக நுணுக்கமாக, ஆதாரங்களோடு விளக்கியிருப்பது, அவரது நுட்பமான அறிவை வெளிப்படுத்துகிறது. […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 60ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிக, அவர்களிடம் இருந்து கண்டதையும், கேட்டதையும், பார்த்ததையும், கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.   —- […]

Read more