கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்

கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்,  ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தகநிலையம், பக்.200, விலை ரூ.180; கம்பராமாயணம் தொடர்பான ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஏழாவது கட்டுரையான கம்பனும் பாரதிதாசனும் கட்டுரை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை பழமைச் சிமிழுக்குள் அடைக்கும் முயற்சி என்று ஐயப்படுகிறவர்களுக்கு விளக்கம் அளிக்கும் முயற்சியான பின்னுரை, எட்டாவது கட்டுரையாகத் தோன்றிவிட்டது. கம்பராமாயணம் இன்று வரை போற்றப்படுவதற்குக் காரணம் அதன் உலகியல் அடித்தளமே என்பதை விளக்கும் கம்பனில் உலகியல் கட்டுரை, கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிடுகிற சில பொருள்களை வைத்து, அவர் குறிப்பிடுவது திருமாலிருஞ்சோலை, […]

Read more

இனிய காண்க (தமிழ் இலக்கியம் – புதிய பார்வை)

இனிய காண்க (தமிழ் இலக்கியம் – புதிய பார்வை),  ம.திருமலை, மீனாட்சி புத்தகநிலையம்,  பக்.220, விலை ரூ160 . தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகிய நூல் ஆசிரியர், இன்றைய வாழ்க்கை மதிப்பீடுகளை பழைய தமிழ் இலக்கியங்களில் கண்டு நமக்கு இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார்; விளக்குகிறார். பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பல கருத்துகள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். இன்றைய வாழ்க்கைக்கு பழைய இலக்கியங்கள் வழிகாட்டவும் செய்யும் என்பதை பல சான்றுகளுடன் இந்நூல் விளக்குகிறது. நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களினூடே […]

Read more