இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்

இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்,  ம.திருமலை, செல்லப்பா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.220. ஒருவர் அல்லது ஒரு பொருள் தனிப்பட்டுத் துலக்கமாகத் தெரியாமலும் தக்க வெளிப்பாட்டில் இல்லாத முறையிலும் இருப்பது இருண்மை. இலக்கியப் படைப்பின் உள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தானது, முதல் வாசிப்பில் தெளிவாகப் புலப்படாத நிலையில்தான் அது இருண்மை எனப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய அரசியல் நெருக்கடிகள் எதையும் வெளிப்படையாகக் கூற முடியாதபடி தடுத்தன. அப்போது படைப்பாளிகள் மறைபொருளாக, இரட்டைப் பொருள் கொண்ட உருவகநிலையில் எதையும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள் […]

Read more

இனிய காண்க (தமிழ் இலக்கியம் – புதிய பார்வை)

இனிய காண்க (தமிழ் இலக்கியம் – புதிய பார்வை),  ம.திருமலை, மீனாட்சி புத்தகநிலையம்,  பக்.220, விலை ரூ160 . தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகிய நூல் ஆசிரியர், இன்றைய வாழ்க்கை மதிப்பீடுகளை பழைய தமிழ் இலக்கியங்களில் கண்டு நமக்கு இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார்; விளக்குகிறார். பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பல கருத்துகள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். இன்றைய வாழ்க்கைக்கு பழைய இலக்கியங்கள் வழிகாட்டவும் செய்யும் என்பதை பல சான்றுகளுடன் இந்நூல் விளக்குகிறது. நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களினூடே […]

Read more

இலக்கியமும் வாசிப்பும்

இலக்கியமும் வாசிப்பும், ம. திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-5.html ஓர் இலக்கியப் படைப்பு அனைத்து வாசகர்களுக்கும் ஒரேவிதமான அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நியதியில்லை. அவ்வகையில், தமிழ் இலக்கியப் பாடல்களில் நூலாசிரியர் தாம் பெற்ற உயர்ந்த உன்னத அனுபவங்களை அழகான இனிய நடையில் வெளிப்படுத்தியுள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தநூல். சங்கப் பாடல்களும் கம்பராமாயணமும், பக்தி இலக்கிய முன்னோடி காரைக்காலம்மையார், மணிமேகலையில் நீர் ஆதாரங்கள், என காதல், […]

Read more

கல்கி முத்திரைக் கதைகள்

கல்கி முத்திரைக் கதைகள் – பதிப்பாசிரியர் ம. திருமலை; பக்.208; ரூ. 100 செல்லாப்பா பதிப்பகம், மதுரை -1; அமரர் கல்கியின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவருடைய சிறுகதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றில் 12 சிறுக்கதைத் தொகுத்து ‘கல்கி முத்திரைக் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். பன்னிரண்டு சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அமைந்துள்ளன. பிழைப்புக்கு வழி தேடி அலையும் கந்தசாமியின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் ‘போலீஸ் விருந்து’ சிறுகதை நகைச்சுவையோடு இன்றைய எதார்த்த நிலையை படம் பிடிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. அந்தக் கதைகயின் […]

Read more