இலக்கியமும் வாசிப்பும்
இலக்கியமும் வாசிப்பும், ம. திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-5.html
ஓர் இலக்கியப் படைப்பு அனைத்து வாசகர்களுக்கும் ஒரேவிதமான அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நியதியில்லை. அவ்வகையில், தமிழ் இலக்கியப் பாடல்களில் நூலாசிரியர் தாம் பெற்ற உயர்ந்த உன்னத அனுபவங்களை அழகான இனிய நடையில் வெளிப்படுத்தியுள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தநூல். சங்கப் பாடல்களும் கம்பராமாயணமும், பக்தி இலக்கிய முன்னோடி காரைக்காலம்மையார், மணிமேகலையில் நீர் ஆதாரங்கள், என காதல், பக்தி, சமூகம் சார்ந்த 11 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் புதுவிதம். இன்றைய நவீன உலகின் ஆய்வுப் பிரிவுகளில் ஒன்றாகப் பேசப்படும் உணர்வுசால் நுண்ணறிவு (எமோஷனல் இன்டெலிஜென்ஸ்) அன்றைய சங்க இலக்கியப் பாடல்களிலேயே இருப்பதை ஐங்குறுநூறு, நற்றிணைப் பாடல்கள் மூலம் அறிவியலின் வழி விளக்குகிறது சங்க இலக்கியமும் உணர்வுசால் நுண்ணறிவும் கட்டுரை. படிக்கத் திகட்டாத, பாமரரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான குற்றாலக் குறவஞ்சியில் உள்ள இலக்கிய நயத்தை சான்றுகளுடன் நயம்பட விளக்குகிறது திருக்குற்றாலக் குறவஞ்சியில் இலக்கியம் நயம் கட்டுரை. முதல் இலங்கைத் தமிழ் நாவல் எனக் குறிப்பிடப்படும் அசன்பே சரித்திரம் நாவலில் பண்பாட்டுச் சித்தரிப்பு தொடர்பான கட்டுரை ஒன்றும் இந்நூலில் உள்ளது சிறப்பு. நன்றி: தினமணி, 8/10/2012.
—-
வடலூரார் வாய்மொழி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-8.html
அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை என்று முழங்கிய வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் பாடல்களுக்கு திரு அருட்பா என்று பெயர். இது ஆறு திருமுறைகளாக அமைந்துள்ளது. இதில் உள்ள பாடல்களை வடலூரார் வாய்மொழி என்ற தலைப்பில் சாமி. சிதம்பரனார் எழுதியுள்ளார். வள்ளலார் பக்தர்களுக்கு மனதில் பரவும் பரவசம். நன்றி: தினத்தந்தி, 5/3/2014.