பெரியாழ்வார்

பெரியாழ்வார், ம.பெ.சீனிவாசன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50.

தமிழ் மொழியில் தோன்றியது போல் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அதிகமான பக்தி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை.

பக்தி இலக்கியத்தின் தொடக்கம் சங்ககாலத்திலேயே அறியப்பட்டாலும் நாயன்மார், ஆழ்வார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.

அதிலும் பன்னிரு ஆழ்வார்களின் படைப்புகள் திருமாலின் பெருமையைப் பாடிச் செல்வதால் ஆழ்வார்களை மால் உகந்த ஆசிரியர் என்று அழைப்பர்.

அவர்களுள் பெரியாழ்வாரின் படைப்புகளையும் அதன் தனிச் சிறப்புகளையும் பற்றிப் பேசுவதுதான் இந்நூல். அறிமுகம் , வாழ்க்கையும் படைப்பும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, கிருஷ்ணாநுபவம், இலக்கியத் திறன், தத்துவ கருத்துகள் என ஏழு தலைப்புகளில் அலசி ஆராய்ந்துபதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர். பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் இல்லை என்பதை அவர் பாசுரங்களை விளக்கிச் சொல்வதன் மூலம் ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்.

சமய தத்துவத்தையும், பக்தி நெறியையும் தம் இறை அனுபவத்தோடு கலந்து சொல்லும் பெரியாழ்வாரின் பாசுரங்கள் பக்தர்களிடம் மட்டுமல்லாமல், இலக்கிய அன்பர்கள் மனதிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பதை நூலாசிரியர் குறிப்பிட மறக்கவில்லை.

நன்றி: தினமணி, 16/2/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *