இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி
இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக்நகர், சென்னை – 600083, விலை 60 ரூ.
தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிகளை அவர்களிடம் இருந்து கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.
—
உடல்நலம் காக்க உன்னத வழிகள், டாக்டர் பெ. போத்தி, விகடன் பிரசுரம், விலை 80 ரூ.
வணிகமயமான இன்றைய வாழ்க்கைச் சூழலில், நோய் நொடியின்றி வாழ விரும்பும் அன்பர்களுக்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றக்கூடிய எளிய பயிற்சிகளை இந்நூல் விளக்குகிறது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் முன்னோர் வாக்கை எளிய வழியில் எடுத்துச்சொல்கிறது. நன்றி: கல்கி 17/07/11