பிரதமர் புரந்தரதாசர்

நெஞ்சில் பூத்த நெருப்புத் தாமரை, சுப. ஸ்ரீ. சுப்ரமணியன், சுபஸ்ரீ பதிப்பகம், 12, நால்வர் தெரு, கணபதிபுரம், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600059, பக்கம் 92, விலை 45ரூ.  

வாழ்வியல் கவிஞரின் கவிதைப் படைப்புகள், பாவம், ‘அரசியலை வெறுக்கும் இவர் வட்டமோ, நகரமோ, சதுரமோ, மாவட்டமோ, எந்தப் பரிவட்டமும் வேண்டாம்’ என்ற இவரது கவிதை வரிகள் அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.  

பிரதமர் புரந்தரதாசர், தஞ்சை வி. நாராயணசாமி, திருவரசு புத்தகம் நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17, பக்கம் 250, விலை 80 ரூ.  

கர்நாடகத்தில் 15-16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புரந்தரதாசர். துளசிதாசர், ஜெயதேவர், மீரா போன்று சிறந்த இசைப் பாடல்களைப் பாடியவர். 4,75 லட்சம் பாடல்களை இவர் பாடியதாகக் கூறுகின்றனர். மராட்டியத்தில் உள்ள பண்டரிபுர இறைவனைப் போற்றி வழிபட்டவர் புரந்தரதாசர். இரகுநாத ராவ் எனும் பெயருடன் பாடல்களைப் பாடி வந்தவர், எவ்வாறு புரந்தரதாசர் ஆனார் என்பதையும் அவருக்குப் பிதாமகர் என்பது எவ்வாறு பொருந்தும் என்பதையும் இந்நூல் எளிய தமிழில் விளக்குகிறது.
– முகிலை ராசபாண்டியன்  

காற்று அலைகளிலே, பேராசிரியர் கு. சிவமணி, சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை – 78, பக்கம் 208, விலை 130 ரூ.

சாக்ரடீஸ், கவுதம புத்தர், வள்ளலார், விவேகானந்தர், இலக்கியமும் வாழ்க்கையும், இளங்கோவின் கோவலன், அன்புள்ளம், தனித்திருத்தல், தாயன்பு போன்ற தலைப்புகளில் பேராசிரியர் கு. சிவமணி நிகழ்த்திய வானொலி பேருரைகளின் தொகுப்பு.
– எஸ். குரு

தமிழ்நாட்டு வரலாறு, அ. ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிலிட்), 41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098, பக்கம் 364, விலை 150 ரூ.  

மூன்றாவது பதிப்பாக வெளிவரும் இந்நூலின் முதல்பாகம், தமிழகத்தின் இயற்கை அமைப்பில் தொடங்கி, கடல் கடந்த தமிழர் நாகரிகம் (காலம் குறிப்பிடவில்லை) வரையும், இரண்டாம் பாகத்தில் குமார கம்பனின் படையெடுப்பில் தொடங்கி, இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி முடிய தமிழக வரலாறு 1969 ஆம் ஆண்டு வரை இடம் பெற்றுள்ளது.
நாம் வரலாற்றை எழுதுவதில் பின்தங்கியே உள்ளோம் என்பதற்கு இந்நூலே அத்தாட்சி. ஏனெனில் 2011 வரையிலான வரலாறாவது இடம் பெற்றிருக்கவேண்டும். ஆனால், 1969க்குப் பிறகு தமிழக வரலாறே இடம் பெறாதது பெரும் குறையே. – பின்னலூரான்
நன்றி: தினமலர் 29-01-12    
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *