என் பார்வையில் பிரபலங்கள்

என் பார்வையில் பிரபலங்கள், பி.ஆர்.துரை, வர்த்தமானன் பதிப்பகம், பக். 316, விலை ரூ. 250, நூலாசிரியர் தனது வாழ்நாளில் சந்தித்த 73 பிரபலங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சிறுவனாக நாடகங்களிலும், திரைப்படங்களிலும் தனது கலை வாழ்வைத் தொடங்கியவர் பி.ஆர்.துரை. இதில் எஸ்.வி.சகஸ்ரநாமம், ஜெமினி கணேசன், ஏ.பி.நாகராஜன், நாகேஷ் போன்ற முந்தைய தலைமுறை கலையுலக மன்னர்கள் முதல், கலையுலகிலிருந்து அரசியலுக்குள் நுழைந்த ஜாம்பவான்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோர் வரை இடம் பிடிக்கின்றனர். ஒருசில தொழிலதிபர்களும் உண்டு. இவர்களுடன் ஏற்பட்ட […]

Read more

சித்தர் வழி

சித்தர் வழி, அரங்க. இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம்,  பக்.312, விலை ரூ.200.   சித்தர் மரபு குறித்து பொதுநிலையில் பேசப்படுபவை, சித்தர் நெறியின் மெய்ப்பொருள் ரகசியங்கள் குறித்து பேசப்படுபவை, அனுபவ அறிவால் உணரக் கூடிய நூலாக திகழும் திருமந்திரம், சித்தர் நோக்கில் சைவநெறி போன்றவை குறித்த 21 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சித்தர் நெறியின் பன்முகத்தன்மையை விரிவாகப் பேசுவதோடு, அவர்களின் பரிபாஷைகள் குறித்த தொகுப்பு, அவற்றில் ஒரு சிலவற்றுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் ஏன் பரிபாஷைகளைக் கையாண்டனர் என்பதற்கான காரணம் உள்ளிட்டவற்றை தனது […]

Read more

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள், அரங்க.இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம்,  பக்.269, விலை ரூ.150. சென்னைப் பல்கலைக்கழகம், 159 ஆண்டுகள் பழைமையும் சிறப்பும் உடையது. 2014இல்தமிழ்த் துறையின் தனிப்பெரும் சுடர்கள்  எனும் தலைப்பில் நடந்த தேசியக் கருந்தரங்கில் வாசிக்கப்பட்ட துறைத் தலைவர், பேராசிரியர்கள் பலரின் அருமை பெருமைகள் குறித்த கட்டுரைகள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள் என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவர்களாக இருந்தவர்கள், திருக்குறள் ஆய்வு மையத்தின் பொறுப்பில் இருந்தவர்கள், ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சிய அகராதித் திட்டக் குழுவில் பணியாற்றியவர்கள், […]

Read more

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை, க.வெங்கடேசன், வர்த்தமானன் பதிப்பகம், பக்.534, விலை ரூ.425. தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த பலருக்கும் – அவர்கள் வாழுமிடம் பற்றிய தகவல்கள் கூட தெரியாமல் இருக்கும் இக்காலத்தில், இந்நூல் தமிழ்நாட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்துத் தந்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பு வரலாறு சங்க காலத்திலிருந்து இன்று வரை கால வரிசையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசாங்கம், அது செயல்படும்விதம், பல்வேறு துறைகள், அவை இயங்கும் முறைகள், மாவட்ட, ஊராட்சி நிர்வாகங்களின் அமைப்புமுறை, அவை செயல்படும்விதம், கிராம நிர்வாக அலுவரில் இருந்து […]

Read more

வியாச பாரதம்

வியாச பாரதம், வர்த்தமானன் பதிப்பகம், பக். 2000, விலை 700ரூ. வேதங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் இதில் இடம் பெறுவதால் வியாசபாரதத்தை ஐந்தாம் வேதம் என்பர். நூற்றுக்கணக்கான மாந்தர்கள் உலாவரும் ஸ்வர்ண மாளிகை, வியாசபாரதம். ஏராளமான கிளைக்கதைகளையுடைய ஓர் ஆலவிருட்சம், வியாச பாரதம். நளதமயந்தி வரலாறு, சத்தியவான் சாவித்திரி வரலாறு, இராமன் வரலாறு, துஷ்யந்தன் சகுந்தலை வரலாறு போன்றவை புகழ் வாய்ந்தவை. அரிச்சந்திரன், குசேலன், கந்த பெருமான், பரசுராமர் போன்றோர் வரலாறும் இதில் இடம் பெற்றுள்ளன. மனித வாழ்க்கையை நெறிப்படுத்த எழுந்த இந்நூல், அறவழியில் […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, மிஷல்தனினோ, கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை 300 ரூ. இந்திய இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதத்திலும், ஹிந்து மத வேதங்களிலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் நதிகளில் ஒன்று சரஸ்வதி நதி. இந்தியாவின் வடமேற்கே பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வறண்ட பிரதேசத்தில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிய இந்த நதி, கால மாற்றங்களினால் பூமிக்குள் புதைந்து போனது. இந்நதி குறித்த பல்வேறு ஆய்வுகள் […]

Read more