தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை, க.வெங்கடேசன், வர்த்தமானன் பதிப்பகம், பக்.534, விலை ரூ.425.

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த பலருக்கும் – அவர்கள் வாழுமிடம் பற்றிய தகவல்கள் கூட தெரியாமல் இருக்கும் இக்காலத்தில், இந்நூல் தமிழ்நாட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்துத் தந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பு வரலாறு சங்க காலத்திலிருந்து இன்று வரை கால வரிசையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசாங்கம், அது செயல்படும்விதம், பல்வேறு துறைகள், அவை இயங்கும் முறைகள், மாவட்ட, ஊராட்சி நிர்வாகங்களின் அமைப்புமுறை, அவை செயல்படும்விதம், கிராம நிர்வாக அலுவரில் இருந்து மாவட்ட ஆட்சியர் வரை உள்ள பல்வேறு அதிகாரிகளின் பணிகள், சட்டம் சார்ந்த, சாராத அமைப்புகள் செயல்படும்விதங்கள், மத்திய -மாநில உறவுகள், தமிழ்நாட்டின் சமூக நலத்திட்டங்கள் உட்பட நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்களை இந்நூலைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உட்பட்ட பகுதிகள், அவற்றில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகள் உட்பட அனைத்தையும் பற்றிக் கொடுக்கப்பட்ட தகவல்கள் சிறப்பு. பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கும், “விஷயம் தெரிந்த ஆளாக’‘ இருக்க விரும்புபவர்களுக்கும் உதவும் நூல்.

நன்றி:தினமணி,09/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *