பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை

பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை, அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. புரட்சிக் கவிஞர் என்று அறியப்பட்ட பாரதிதாசன் படைப்புகளில் காணப்படும் நகைச்சுவை பற்றி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.நகைச்சுவை என்றால் என்ன? என்பதை நூலின் முதல் கட்டுரையான நகைச்சுவையும் பாரதிதாசனும் விளக்குகிறது. நகைச்சுவை உணர்வை பாரதிதாசன் எவ்வாறு கையாண்டார் என்பதையும் அது கூறுகிறது. நகைச்சுவை என்பது இருபக்கமும் கூர்மையான வாள். அதை மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அது பயன்படுத்துபவரையே தாக்கிவிடும் என்று கூறும் நூலாசிரியர்,  பாரதிதாசன் எழுதிய பாடல்களில், நாடகங்களில், கதைகளில், திரைப்படங்களில் […]

Read more

தெய்வப் புலவர் திருவாய்மொழி

தெய்வப் புலவர் திருவாய்மொழி, அரங்க. இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.656, விலை ரூ.500. திருக்குறளின் சிறப்பையும், மாண்பையும் தமிழறிஞர்கள் மட்டுமல்ல, எல்லீஸ், ஜி.யு.போப் முதலிய வெளிநாட்டவர் பலரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு போற்றி உரைத்துள்ளனர். மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். திருக்குறளில் உள்ள பல்வேறு சிறப்புகளை குறிப்பாக, நூலின் அமைப்பு, திறனாய்வு குறித்த விவரங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள், அதில் இடம்பெற்றுள்ள உவமைகள், அணிநயங்கள், பாயிரத்தில் திருவள்ளுவர் கூறும் இறை, அறிவு பற்றிய கருத்துகள்,  உலகியல் பார்வையோடு கூடிய துறவு அதிகாரத்தின் சிறப்பு, திருக்குறளை எடுத்தாண்ட புலவர்களின் கருத்துகள், பல்வேறு […]

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.192, விலை ரூ.120. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றியவர் நூலாசிரியர். தமிழிலக்கியங்கள் குறித்து அவர் எழுதிய ‘ஒழுக்கம்‘ தமிழ் கற்பித்தலில் ஆசிரியர் பங்கு ‘ஒளவையார்‘ ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி‘ உள்ளிட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழிலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளாக இவை இருப்பினும், பழந்தமிழ் இலக்கிய கருத்துகளை சம கால சிந்தனையுடன் பொருத்திப் பார்ப்பது வியக்க வைக்கிறது. உதாரணமாக, பழங்காலத்தில் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் தொடர்பற்று இருந்ததால், அந்தந்தப் பகுதிக்கேயுரிய ஒழுக்கநெறிமுறைகள் இருந்தன. இன்று உலக மக்கள் அனைவரும்வாழ்க்கைத் தேவை […]

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஒழுக்கத்தின் மேன்மை, திருக்குறளின் பெருமை, அவ்வை பாட்டியின் தமிழ்த்தொண்டு உள்ளிட்டவை கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்காலத்திற்கு தேவையான ஆசிரியர்களின் கற்பித்தல் முறை பற்றி எடுத்துரைத்துள்ளது அழகு. நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள், அரங்க.இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம்,  பக்.269, விலை ரூ.150. சென்னைப் பல்கலைக்கழகம், 159 ஆண்டுகள் பழைமையும் சிறப்பும் உடையது. 2014இல்தமிழ்த் துறையின் தனிப்பெரும் சுடர்கள்  எனும் தலைப்பில் நடந்த தேசியக் கருந்தரங்கில் வாசிக்கப்பட்ட துறைத் தலைவர், பேராசிரியர்கள் பலரின் அருமை பெருமைகள் குறித்த கட்டுரைகள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள் என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவர்களாக இருந்தவர்கள், திருக்குறள் ஆய்வு மையத்தின் பொறுப்பில் இருந்தவர்கள், ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சிய அகராதித் திட்டக் குழுவில் பணியாற்றியவர்கள், […]

Read more