ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும், மதுரை பாலன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை 120ரூ.

நூலாசிரியர், திரைத்துறையில் பணியாற்றி வருபவர். அவரது சிறுகதைகள், திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. காட்சிகள் நகரும் விதம் அருமை. காதல் ஆகட்டும், ஜாதி மோதல் ஆகட்டும் எதைப் பற்றியும் நம்மை உசுப்பி விடும் விதத்தில் கூறிச் செல்கிறார்.

பாலியல் தொழிலாளியின் அவல வாழ்வைச் சொல்லும், ‘சுழல்’, ஜாதிக் கலவரங்களைச் சொல்லும், ‘தீண்டாமை’ மற்றும் ‘அடங்கா நெருப்பு’, மனைவியின் கடந்த காலத்தை ஒரு சந்தேகக் கணவன் கிளறிப் பார்ப்பதைச் சொல்லும், ‘எதிர்மறை’ ,தன் வளர்ப்பு ஆட்டின் மீது ஒரு கிராமத்தான் வைத்திருக்கும் மேலான அன்பைச் சொல்லும், ‘ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்’, போலி சந்நியாசிகளைக் கிண்டல் செய்யும், ‘ஏற்றி விட்ட ஏணியும் இறக்கி விட்ட பாம்பும்’ போன்ற கதைகள், நம்மை அடிக்கடி அசை போட்டுப் பார்க்கத் தூண்டுகின்றன.

-எஸ்.குரு,

நன்றி: தினமலர், 4/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *