குழந்தை வரைந்த காகிதம்
குழந்தை வரைந்த காகிதம், கவிஞர் இளவல் ஹரிஹரன், ஓவியா பதிப்பகம், வலை 100ரூ.
தெலுங்கில் சமீப காலமாக நானிலு என்னும் நான்கு வரிக் கவிதை வடிவம், கொடி கட்டிப் பறக்கிறது. இதற்குத் தமிழில் தன் முனைக் கவிதைகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது குழந்தை வளர்ந்த காகிதம் என்ற தலைப்பில் தன் முனைக் கவிதை நூலை முதன்முறையாகப் படைத்து வெளியிட்டு இருக்கிறார் கவிஞர் இளவல் ஹரிஹரன்.
பத்திரப் பதிவுத்துறையில் மிக உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர், வாழ்வில் தான் கண்டதையும், உணர்ந்ததையும் இதில் பதிவு செய்துள்ளார். திருவிழாவில் விற்கும் ஜவ்வு மிட்டாய் வண்ண வாழ்க்கை, தாமிரத்திற்காகப் பலியாகும் உயிர், தங்கமாகும் மக்கள் நெஞ்சில், பானையில் வேகின்றது இனிப்புப் பொங்கல் விவசாயிகளின் கண்ணீர் துளிகளுடன் என்பன போன்ற கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன.
நன்றி: தினத்தந்தி, 14/8/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818