தமிழர் தளபதிகள்
தமிழர் தளபதிகள், கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html மனித குலத்தில் போர் என்பது காலந்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது. போர்க் கருவிகளும், போர் முறைகளும் மாறியிருக்கிறதே தவிர போர் மறையவில்லை. இந்நூல் போர்ப்படை தளபதிகள் குறித்து சங்க இலக்கிய நூலின் வழி நின்று விவரிக்கிறது. மறைந்திருந்து மரத்துக்கு நீர் வார்க்கும் வேர்கள் போலவே போர்ப்படைத் தளபதிகள் திகழ்ந்தனர் என்பதை சரித்திர நிகழ்வுகளையும், சங்கத் தமிழ் பாடல்களையும், சான்றாகக் காட்டி நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். பாண்டியன் நெடுஞ்செழியனை சிறுவனாக எண்ணி, அவனுக்கு எதிராக சோழ, சேரர் உள்ளிட்ட 8 மன்னர்கள் போரிட வந்தபோது நெடுஞ்செழியனுக்கு அரணாக நின்று போரிட்டு வெற்றியை எட்டிப்பிடிக்க காரணமாக இருந்தவர் அதியன் எனும் படைத்தளபதிதான். அதியனைப் போலவே சேர நாட்டின் குதிரைமலைப்பிட்டன், கடைப்பொருநன், திருக்கண்ணன் உள்ளிட்ட 15 தளபதிகளின் சிறப்பையும், அவர் தம் வரலாற்றையும் சுருங்கக்கூறி படிப்போரை அக்காலத்துக்கு அழைத்துச் சென்றிருப்பது நூலின் சிறப்பு. நன்றி: தினமணி, 24/3/2014.
—-
உதிரும் மௌனம், சந்திரா மனோகரன், ஓவியா பதிப்பகம், வத்தலகுண்டு, பக். 144, விலை 100ரூ.
துளிப்பா எழுதுவது சவாலானது. அந்த சவாலைத்தான் இங்கே மௌனமாக உதிர்த்திருக்கிறார் கவிஞர். அவரது மௌனமனத்தில் வெளி ஒவ்வொரு துளிப்பாவிலும் ஆழமாக கீழிறங்கிச் செல்கிறது. கவிதைக்கு அழகு மனத்தின் மௌனமும் அதன் ஆழமும்தான். அந்த ஆழத்தை தேடிச் செல்லும் பயணம்தான் இந்நூல். வெறும் வாசகனை மட்டுமல்ல, மற்றொரு கவிஞனின் கவிதை மனசையும் உலுக்கி எடுக்கும் மௌனம் சிலருக்குத்தான் வெளிப்படும். படைப்பாளிக்குப் பசியாறவில்லை தின்பதற்கு நிறைய கவிதையிருந்தும் இதுதான் உண்மையும்கூட. நன்றி: குமுதம், 2/4/2014.