வரப்பெற்றோம்

வரப்பெற்றோம் பிராம்மண பாரம்பரியம், வி.எஸ். சங்கரன், கிடைக்கும்இடம்-2, கோபால்சாமி தெரு, ராம்நகர், அம்பத்தூர், சென்னை 53, விலை 50ரூ.044 26585821 அந்தணர்கள் எனக் கூறப்படும் பிராமணர்கள் பற்றிய பழிச்சொல்லை அகற்ற ஆசிரியர் இந்த நூலில் விளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். காசி முதல் மன்னார் வளைகுடா வரை, சே. குமரப்பன், கிடைக்குமிடம்-மல்லிகை பதிப்பகம், தேவகோட்டை, விலை 40ரூ. ஆன்மிகம், இலக்கியம், அறிவியல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. வள்ளியூர் திருத்தலம், முத்தாரமன் திருத்கோவில், வள்ளியூர் முத்து ஆறுமுகம் பிள்ளை, சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகம், 55 மேலரதவீதி, வள்ளியூர், […]

Read more

தமிழர் வீரம்

தமிழர் வீரம், ரா.பி. சேதுப்பிள்ளை, பாரி புத்தக நிலையம், 184/88, பிராட்வே, சென்னை 108, பக். 96, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-138-5.html சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர். சொல் ஆராய்ச்சியில் வல்லவர். எதுகை, மோனையுடன் பேசும் ஆற்றல் பெற்றவர். தமிழ் இன்பம் என்ற நூலுக்கு முதன்முதலில் சாகித்ய அகடமி பரிசு பெற்றவர். தருமை ஆதீனத்தால், சொல்லின் செல்வர் என்ற பட்டத்தைப் பெற்ற பாராட்டுக்குரியவர் நூலாசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை. கடல் கடந்து மாற்றாரை கலக்கியது தமிழர் […]

Read more

இராமன் எத்தனை இராமனடி

இராமன் எத்தனை இராமனடி, அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 232, விலை 175ரூ. உலக நாடுகள் எங்கும் பரவிக்கிடக்கும் பெருமை மிக்கது ராமாயணம். ராமன் இந்திய தேசத்துக்கு மட்டும் சொந்தமல்லன். உலக நாடுகள் எங்கும் ராமன், சீதை கதைகள் பரவிக்கிடக்கின்றனஎன்பதையும், இவர்கள் தெய்வங்களாய் வணங்கப்படுகின்றனர் என்பதையும் இந்த ஆய்வு நூலில் அ.கா. பெருமாள், அருமையாகத் தீர்வு செய்துள்ளார். பாரட்டத்தக்கது. ராமாயணம் வழி பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, நாடோடிக் குழுநடனம் ஆகிய பழங்கலைகளும் வளர்ந்துள்ளதை, இந்நூல் தெளிவாக்கி உள்ளது. ராமன், அம்பின் நுனியில் […]

Read more

யான் பெற்ற பயிற்சிகள்

யான் பெற்ற பயிற்சிகள், மாக்சிம் கார்க்கி, தமிழில்-ஆர்.ராமநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-959-1.html தாய் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கையின் முதல் பாதி துன்பங்களும் துயரங்களும் நிறைந்தவை. அவரது தந்தை இறப்பிற்குப் பின் அவர் சந்தித்த வேதனைகள் பல. அவருக்கு தாயாக, வழிகாட்டியாக இருந்தவர் அவரது பாட்டி அக்குலினா என்பவர். தனது 10 வயது முதல் […]

Read more

பொன்னியின் செல்வன் – ஆடியோ

பொன்னியின் செல்வன் ஆடியோவில். கல்கியின் பொன்னியின் செல்வன் ஆடியோ சிடி (5 பாகங்கள்) இப்போது டயல் ஃபார் புக்ஸில் கிடைக்கிறது. ஃபோன் மூலம் ஆர்டர் செய்யலாம். ஃபோன் – 94459 01234 ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/ponniyin_selvan_audio.html    

Read more

முதல் முகவரி

முதல் முகவரி, வெ. நீலகண்டன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 140ரூ. வாழ்வில் சிகரத்தை எட்டிய பலர், முறையாகச் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி அந்த உயரத்தை எட்டவில்லை. தங்களுக்கான படிக்கட்டுகளை தாங்களே செதுக்கித்தான் உச்சிக்குப் போயிருக்கறிர்கள். நம்பிக்கை மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு, புத்திசாலித்தனமான உழைப்பை மட்டுமே தோழனாக்கிக்கொண்டு தங்கள் கனவுகளை நனவாக்கியிருக்கிறார்கள். எண்ணற்றோருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள். அப்படி சென்னைக்கு கனவுகளை மட்டும் சுமந்துவந்து அவற்றை நனவாக்கிக் காட்டியவர்களின் வாக்குமூலத் தொகுப்பு இது. சாதனையாளர்களின் முதல் […]

Read more

திருக்குறள் நயவுரை

திருக்குறள் நயவுரை, திருக்குறள் பெட்டகம், தங்க பழமலை, அருள்மொழி வெளியீடு, திருக்கோவிலூர் 605 757, பக். 88, விலை 30ரூ. திருக்குறள் நயவுரை என்ற முதல் நூலில் குறட்பாவுக்கு உரை காணும்பொழுது, அவ்வுரைக்கு அரண் சேர்க்கும் வண்ணம் திருக்குறளுக்குள்ளேயே அமைந்துள்ள வேறு குறட்பாக்களைக் கருத்திற்கொள்வதும், நாம் கொள்ளும் உரையை உறுதிப்படுத்தும் வண்ணம் பிற புலவர் பெதுமக்களும், அருளாளர்களும் கூறிப்போந்துள்ள கருத்துகளை உளங்கொள்வதும் சிறப்பமைந்த உரைக்கு வழிகோலும் என்பதை மனதில் இறுத்தியே இவ்வுரையினை யான் எழுதியுள்ளேன் என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பு உள்ளது. அடுத்து திருக்குறள் […]

Read more

மன்னுபுகழ் மணவாள மாமுனிவன்

மன்னுபுகழ் மணவாள மாமுனிவன், இரா. அரங்கராஜன், ஸ்ரீ ரங்க நாச்சியார் அச்சகம், திருச்சி, பக்.410, விலை 200ரூ. மணவாள மாமுனிகளின் வாக்கையும் வாழ்க்கையையும் படம் பிடித்துக்காட்டி, படிப்பவர்களை மாமுனிகள் வாழ்ந்த காலத்துக்கே கொண்டுபோய், நேராக அனுபவிக்கும் அனுபவத்தை இந்நூல் அளிக்கிறது என்று அ.வெ. ரங்காசார்யர் எழுதியுள்ள அணிந்துரை நூற்றுக்கு நூறு சரி.  ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமத் நாதமுனிகளால் தொடங்கப்பெற்று, ஸ்ரீமந் மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகிறது. அந்தப் பரமனை எப்படிச் சேவிக்க வேண்டும், எப்படி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று உதாரண புருஷர்களாய்த் […]

Read more

பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியோடர் பாஸ்கரன், தமிழில்-லதானந்த், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 280, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூலுக்கான இந்திய அரசின் விருது பெற்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். 1897ஆம் ஆண்டு சென்னையில் (அப்போது மதராஸ்) அரைவல் ஆஃப் தி டிரெயின், லீவிங் தி ஃபேக்டரி ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டதில் தொடங்கி சாமிக்கண்ணு வின்சென்ட், ஆர்.வெங்கையா, ஆர்.நடராஜ முதலியார், பிரகாசா, […]

Read more

நர பட்சணி

நர பட்சணி, நானக் சிங், தமிழில்-முத்து மீனாட்சி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. இந்திய விடுலையின்போது வாழ்ந்த பொதுவுடமை சிந்தனை கொண்ட இரு இளைஞர்களின் போராட்ட வாழ்க்கையே இந்தப் புதினம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆலை முதலாளி டாகூர் சிங். இவரது மனைவி அமர்கௌர், மகன் பிரீத்பால். இவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஊனமுற்ற சராசரி இளைஞன் சிங்காரா சிங். அவனது இளம் மனைவி சுலோச்சனா என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களுடன் தொடங்கும் கதை, பொதுவுடமை சித்தாந்தம் பேசும் […]

Read more
1 2 3 4 5 9