திரையுலகப் பிரபலங்கள் 1

திரையுலகப் பிரபலங்கள் 1, ஏஎல். எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-816-1.html சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், தமிழகத்தில் பல வெற்றிப் படங்களுக்குத் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். இவர் கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவானதால், எளிய தமிழ் நடையில் நாடகம் மற்றும் சினிமா துறைகள் குறித்த நூல்களை எழுதும் எழுத்தாளராகவும் பரிணமிக்கிறார். சினிமா துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கும் […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவம்

ஸ்ரீ வைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீசூர்ணத்தைச் சுமங்கலிப்பெண்கள், கன்னிப்பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப்பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு நடத்துவதுண்டு. சீமந்தம் என்றால் தலையின் […]

Read more

வன்னி யுத்தம்

வன்னி யுத்தம், (களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு), அப்பு, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 125ரூ. ஈழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட்டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது. இறுதிக்கட்டப் போரின் போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன? என்பது குறித்த ஆழமான விமர்சனத்தை நேர்நின்று பார்த்த அப்புவின் எழுத்தில் படிக்கும்போது ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. பள்ளிப் பருவம் முதல் […]

Read more

உகரச்சுட்டு

உகரச்சுட்டு, முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 91, பக். 112,விலை 80ரூ. தமிழ்மொழியில் அ, இ, உ என மூன்ற சுட்டெழுத்துக்கள் உள்ளன, இந்தியாவில் உள்ள பிற மொழிகளில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. அ என்னும் சுட்டெழுத்து அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும் இ என்னும் சுட்டெழுத்து இவன் இவ்வீடு என அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். உ என்னும் சுட்டெழுத்து தற்காலத்தில் பேசப்படுவதில்லை. உ என்னும் சுட்டெழுத்து தொலைவுக்கும் அருகுக்கும் […]

Read more

இதயம் திருந்த இனிய மருந்து

இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12, பக். 63, விலை 30ரூ. முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை, இறை மார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் மிகமிக எளிமையாக ஆக்கப்பட்டிருக்கும் நூல் இது. இஸ்லாம் வலியுறுத்தும் இறைக்கொள்கை, ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு. மறுமை போன்றவற்றுடன் பெற்றோரை மதித்தல், நட்புக் கொள்ளுதல், கலந்தாலோசித்தல் முதலிய வாழ்வியல் நடைமுறைகளையும் மனதில் பதியும்படி விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. மனிதர்களின் இதயங்களில் படிந்துள்ள […]

Read more

பாரதத்தின் பேரரசி

பாரதத்தின் பேரரசி (சாதனை வரலாறு), அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 504, விலை 360ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-4.html முதல்வர் அம்மாவின் வாழ்க்கை சரிதத்தை புதுக்கவிதை நடையில் தந்துள்ளார் கவிஞர் அழகிய பாண்டியன். அம்மாவின் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள், இடையூறுகள், சூழ்ச்சிகள், சோதனைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி, அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் காட்டிய அவரது வீரத்தையும் காட்டி, அவரை பாரதத்தின் பேரரசியாக நம்முன் […]

Read more
1 7 8 9