இதயம் திருந்த இனிய மருந்து

இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12, பக். 63, விலை 30ரூ.

முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை, இறை மார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் மிகமிக எளிமையாக ஆக்கப்பட்டிருக்கும் நூல் இது. இஸ்லாம் வலியுறுத்தும் இறைக்கொள்கை, ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு. மறுமை போன்றவற்றுடன் பெற்றோரை மதித்தல், நட்புக் கொள்ளுதல், கலந்தாலோசித்தல் முதலிய வாழ்வியல் நடைமுறைகளையும் மனதில் பதியும்படி விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. மனிதர்களின் இதயங்களில் படிந்துள்ள நோய்களை அகற்றி, அந்த இதயங்களை இறைவனுக்கு அடிப்பணிந்தவையாய், மாற்றிட வேண்டும் என்பதே நூலின் மைய நோக்கம். முஸ்லிம் அல்லாத சகோதர்களுக்கும் பயன்படும் நூல். நன்றி: குமுதம், 05/06/2013.  

—-

 

ஐ.ஏ.ஸ். வெற்றி உங்கள் கையில், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்புகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு வழி காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம். கட்டுரைகளோடு மாதிரி கேள்வித்தாள்களும் இடம் பெற்றுள்ளன. -தொகுப்பு: இரா. நரசிம்மன், கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 05/06/2013  

—-

 

திருவாரூர் பாபு சிறுகதைகள், சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13, (5) ஸ்ரீபுரம் 2வது தெரு, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 624, விலை 300ரூ.

திருவாரூர் பாபு பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய 100 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு சிறுகதையும் ஏதோ ஒரு வகையில் நான் பார்த்த என்னை பாதித்த சம்பவங்களின் பிம்பங்களே என்கிறார் ஆசிரியர். எதார்த்த உலகில் நடமாடும் நிஜ மனிதர்களே கதை முழுவதும் வலம் வருகிறார்கள் என்பது ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் உணரமுடிகிறது. இக்கதைகள் முழுவதுமே நிஜ மனிதர்களின் சிக்கல்களை பிரச்னைகளை மையமாக வைத்தே பின்னப்பட்டுள்ளன. தன் அறையில் தங்க ஆனுமதித்த நண்பன், வீட்டு உரிமையாளரின் மகளை கர்ப்பமாக்கிவிட்டுத் தப்பிப்போவதும், அதற்கு பிராயச்சித்தமாக அறையில் தங்க அனுமதித்த கணேசனே அவளை மணந்து கொள்வதுமான. வாழ்வியல் சிக்கல்களே பெரிதும் பேசப்படுகின்றன. எளிய டை அடுத்தடுத்த கதைகளைப் படிக்கத் தூண்டுகின்றன. நன்றி: குமுதம், 05/06/2013.

Leave a Reply

Your email address will not be published.