வாய்மொழிக் கதைகள்

வாய்மொழிக் கதைகள், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.145. வாய்மொழிக் கதைகள் பற்றிய விளக்கமான ஆய்வு நுால். அவற்றின் வகைமை, சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வது பற்றி எல்லாம் விரிவாக உள்ளது. பண்பாட்டை அறிவதில் வாய்மொழிக்கதைகளின் முக்கியத்துவத்தை நுட்பமாக உரைக்கிறது. அதன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, புராணக் கதை, பழமரபுக்கதை, நாட்டார் கதை என்ற வகைமைக்கு உட்படுத்தியுள்ளார். அவை பற்றி தனித்தனியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. வாய்மொழிக் கதைகளின் சூழல் பயன்பாடு பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவற்றை சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வதற்கான ஆய்வு உத்தியும் விரிவாக […]

Read more

பனை மரமே பனை மரமே

பனை மரமே பனை மரமே, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை 425ரூ. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள் வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகரன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. தூய தவ வலிமையின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை, துன்பப்படுபவர்களின் துயரங்களைப் போக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை நூலாசிரியர் விரிவாக எடுத்துக் கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   —- இளவரைவியலும் தமிழ்நாவலும், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 155ரூ. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகளை மனதில்கொண்டு இனவரைவியலுக்கும் நாவலுக்குமான தொடர்பை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   […]

Read more

புத்தகத்தின் பெருநிலம்

புத்தகத்தின் பெருநிலம், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 238, விலை 210ரூ. நாட்டார் வழக்காற்றியலில் புலமையாளரான நூலாசரியர், ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக எழுதிய நூல் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தேர்வு செய்யப்பட்ட 22 கட்டுரைகள் சமூகவியல் – மானிடவியல், வரலாறு, சமயம் – தத்துவம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அந்த நூலின் சாராம்சத்தை மிகவும் எளிமையாகவும், சுவைபடவும் விளக்குகின்றன. நூலின் சிறப்புகளை மட்டுமன்றி, அது கூற வந்த, கூறியுள்ள […]

Read more

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. விறுவிறுப்பான தகவல்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி. என்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் இந்நூலாசிரியர் தகவல்களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றப் பார்வையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் என்னும் […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவம்

ஸ்ரீ வைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீசூர்ணத்தைச் சுமங்கலிப்பெண்கள், கன்னிப்பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப்பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு நடத்துவதுண்டு. சீமந்தம் என்றால் தலையின் […]

Read more

ஸ்ரீவைஷ்ணவம்

ஸ்ரீவைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 200. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீ சூர்ணத்தைச் சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப் பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு […]

Read more