இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. விறுவிறுப்பான தகவல்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி. என்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் இந்நூலாசிரியர் தகவல்களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றப் பார்வையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் என்னும் இந்நூல் அவர் சங்கரன்கோவிலில் ஜோதியில் கலந்ததாக சொல்லப்படும் கதைப்பாடலையும் பதிவு செய்கிறது. பகத் சிங்கின் வாழ்க்கையைச் சொல்லும் இந்நூல் அவரது உடல் அரைகுறை மயக்கத்திலேயே ரகசியமாகக் கொண்டு செல்லப்பட்டு வெள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது என்கிற தகவலையும் கூறுகிறது. நன்றி: அந்திமழை, 1/11/2014.
—-
புத்தகத்தின் பெருநிலம், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 210ரூ.
சமூகவியல்-மானிடவியல், வரலாறு, சமயம்-தத்துவம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் ஆகியவற்றை மையமாக வைத்து 22 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். பெருநகரங்களில் வசிப்பவர்களும், தீவிர இலக்கியப்பணியில் இருப்பவர்கள் மட்டுமே அறிந்துகொள்ளும் நல்ல புத்தகங்களை, அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ள இந்த நூல் உதவிகரமாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.