தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்
தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல், தீ. கார்த்தி, இயல்வாகை, பக். 128, விலை 100ரூ.
உணவை மருந்தாக சாபபிட்ட தமிழர்கள், இன்று மருந்தை உணவாக சாப்பிடுவதற்கு வாழ்க்கை முறையே காரணம். இன்றைய அவசர உலகில், பொருளை சேர்ப்பதற்காக, நிம்மதியை விற்று வருகிறோம். இந்த வாழ்க்கை முறையில் இருந்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதலே இந்த நூல். உணவு முறை, தூக்க முறை, குளியல் முறை, பாட்டிய வைத்தியம், உடற்பயிற்சி, உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு தீர்வு, வாழக்கை முறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து, இந்த நூல் விரிவாக அலசுகிறுது. உடல் இயங்கும் விதம், மனநலத்தின் முக்கியத்துவமும் காக்கும் வழிமுறைகளும் போன்ற கட்டுரைகள், முக்கியமானவை. நன்றி: தினமலர்,20/1/2015.
—-
ஒளி எனும் மொழி, விஜய் அம்ஸ்ட்ராங், பேசாமொழி வெளியீடு, பக். 288, விலை 250ரூ.
திரைப்படம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பிற தயாரிப்பு பணிகள், இசை கோர்ப்பு, திரையிடல் என, சினிமாவின் முக்கிய தொழில்நுட்பங்களை விவரிக்கிறது இந்த நூல். சினிமா உருவாகும் விதம் என்ற தலைப்பில், லேப், டெலிசினி, எடிட்டிங், டி.ஐ., டப்பிங், ஆர்.ஆர்., பாசிட்டிவ் ஆகிய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிமுகங்கள் உள்ளன. டிஜிட்டல் சினிமா எனும் தலைப்பின் கீழ், எச்.டி., பிக்சல்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும், செல்லுலாய்டு கேமரா துவங்கி, ரிக்ஸ் வரை கேமராவின் பல்வேறு பாகங்களின் செயல்பாடுகள், ஒளிப்பதிவு கருவிகள் எனும் தலைப்பிலும் விளக்கப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர்,20/1/2015.