குற்றம் தண்டனை மரண தண்டனை

குற்றம் தண்டனை மரண தண்டனை, அ. மார்க்ஸ், கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை, விலை 100ரூ.

எதிர்ப்பு மரண தண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்படும் கருத்தியலாளர் அ.மார்க்ஸின் குற்றம், தண்டனை, மரண தண்டனை என்ற நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கிறது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன. நமது தூக்குமுறை வலி நிறைந்ததாகவும் இழிவுமிக்கதாகவுமே உள்ளது என்கிறார் அ.மார்க்ஸ். தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புறுவோரும் அடித்தளச் சமூக மக்களே என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். நன்றி: அந்திமழை, 1/4/2014

—–

பொதுக்காப்பீடு அறிமுகமும் அறிவுரைகளும், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 100ரூ.

பொதுக்காப்பீடு அதன் நடைமுறை, வழிமுறை, பயன்பாடுகள் பற்றிய முழுமையான நூல். இத்துறை பற்றிய அறிமுகம், அதே சமயம் பொதுவாக மக்கள் மனதில் எழும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் மற்றும் இன்றியமையாத அறிவுரைகளை கொடுத்துள்ளார் நூலாசிரியர் வி. சுப்பிரமணியன். நன்றி: தினத்தந்தி, 5/11/2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *