மழைப்பேச்சு
மழைப்பேச்சு, விகடன் பிரசுரம், விலை 85ரூ.
வாழ்வின் இன்பமான நேரத்தை இளமைக்குள் ஊடுருவி அதனை ஒரு கவிதை தொகுப்பாக கவிஞர் அறிவுமதி அளித்துள்ளார். ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்றார்போல் வண்ணபடங்களையும் அளித்திருப்பது கவிதைக்கு கூடுதல் ரசனையை அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/11/2014.
—-
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 60ரூ.
முப்பெரும் தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியைப் போற்றும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நூலாசிரியர் நவராத்திரி தோன்றிய கதை, கொண்டாடும் விதம், பாட வேண்டிய ஸ்லோகங்களை நூலாக தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.