தெனாலிராமன் கதைகள்

தெனாலிராமன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 130ரூ. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தெனாலி ராமன் கதைகள் அனைத்தையும் கொண்ட முழுத் தொகுப்பாக வெளியாகி உள்ள இந்த நூலில், மொத்தம் 46 கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நூலின் ஆசிரியர், தெனாலிராமன் பிறந்த ஊரான விஜயநகரத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு கிராமங்களில் நிலவும் தெனாலிராமன் கதைகளையும் சேகரித்துத் தந்து இருப்பதால் அத்தனை கதைகளையும் ரசித்துப் படிக்க முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள்

மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், பக். 160, விலை 80ரூ உயிரின உறுப்புகளின் மிகப் பிரதானப் படைப்பே அவற்றின் மூளையாகும். பிற உறுப்புகள் எல்லாம் தங்களது இயக்கத்தை வெளிக்காட்டும்போது, மூளை மட்டும் ஆடாமல் அசையாமல் அமைதியாக இருந்துகொண்டே, உடலின் அனைத்து உறப்புகளையும், நொடிப் பொழுதில் இயக்கும் ஆற்றல் படைத்தது. தவிர, எண்ணங்களும், சிந்தனைகளும் கூட மூளையில்தான் தோற்றுவிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டே உயிரினங்களின் அறிவுகளும் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஆறு அறிவு கொண்ட மனித இனத்தின் மூளையைப் போன்ற […]

Read more

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தனுக்கு பதுமைகள் சொன்ன கதைகள் புகழ் பெற்றவை. விக்கிரமாதித்தனின் வீரதீரச் செயல்களும், கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாதவை. இதுவரை விக்கிரமாதித்தன் கதைகள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது நர்மதா வெளியிட்டுள்ள புத்தகம், பெரிய அளவில் 532 பக்கங்களில் அமைந்துள்ளது. சிறந்த கட்டமைப்பு. நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

இஸ்லாமிய சட்ட கருவூலம்

இஸ்லாமிய சட்ட கருவூலம், அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 250ரூ. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக் எழுதிய ‘பிக்ஹுஸ் சுன்னா’ (இஸ்லாமிய சட்ட கருவூலம்) என்ற நூலை மவுலவி நூஹ் மஹ்ழரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரை 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. இது 6 வது பாகம். இதில் முழுக்க முழுக்க ‘திருமணம்’ குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்வின் முக்கியத்துவம், திருமணம் செய்யும் முறை, மணக்கொடை, பலதாரமணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் […]

Read more

மழைப்பேச்சு

மழைப்பேச்சு, விகடன் பிரசுரம், விலை 85ரூ. வாழ்வின் இன்பமான நேரத்தை இளமைக்குள் ஊடுருவி அதனை ஒரு கவிதை தொகுப்பாக கவிஞர் அறிவுமதி அளித்துள்ளார். ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்றார்போல் வண்ணபடங்களையும் அளித்திருப்பது கவிதைக்கு கூடுதல் ரசனையை அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/11/2014.   —-   நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 60ரூ. முப்பெரும் தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியைப் போற்றும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நூலாசிரியர் நவராத்திரி தோன்றிய கதை, கொண்டாடும் விதம், பாட வேண்டிய […]

Read more

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 225ரூ. சித்தர்கள் தங்கள் கடும் தவத்தின் மூலம் முக்காலங்களையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், தங்கள் பாடல்களின் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவக் குறிப்புகளை விபரம் அறிந்தவர்கள் மட்டுமே புரியக்கூடிய பரிபாஷைகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் என்றும், இவர்களைப் பற்றி பலவாறு கூறப்படுவதுண்டு. சித்தர்கள் என்றாலே திருமூலர் முதல் கோரக்கர் வரையிலான பிரசித்தி பெற்ற 18 […]

Read more

இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?

இவ்வுலக இன்பமா? அவ்வுலக வீடுபேறா?, திருக்குறள் ஆய்வுச் செம்மல் ஆ.ரத்தினம், கலைக்கோ வெளியீடு, தமிழ்குடில், 3/404ஏ, 13வது தெரு, ராம்நகர் தெற்கு, மடிப்பாக்கம், சென்னை 91, பக்கங்கள் 246, விலை 125ரூ. எல்லா பொருளையும் தன்னகத்தே கொண்டு மக்களுக்கு நல்வழி காட்டும் திருக்குறள், மனிதராற்றுப்படை என திகழ்கின்றனது. திருக்குறள் ஆய்வுநூல்கள் நான்கினை வெளியிட்டுள்ள ஆசிரியர் ஆ. ரத்தினத்தின் ஐந்தாவது நுல் இது. திருக்குறள் உரைகள், ஆய்வு நூல்கள் பலவற்றை ஒப்புநோக்கி ஆய்வுசெய்து இந்நூலினை எழுதியுள்ளார். அறம், பொருள், இன்பம் பற்றி பாடியுள்ள வள்ளுவர் பெருமாள், […]

Read more