இஸ்லாமிய சட்ட கருவூலம்

இஸ்லாமிய சட்ட கருவூலம், அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 250ரூ.

திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக் எழுதிய ‘பிக்ஹுஸ் சுன்னா’ (இஸ்லாமிய சட்ட கருவூலம்) என்ற நூலை மவுலவி நூஹ் மஹ்ழரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரை 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. இது 6 வது பாகம். இதில் முழுக்க முழுக்க ‘திருமணம்’ குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்வின் முக்கியத்துவம், திருமணம் செய்யும் முறை, மணக்கொடை, பலதாரமணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விரிவாக விளக்கியுள்ளார். மொழிபெயர்ப்பு நூல் என்று கருத முடியாத வகையில் மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார். முஸ்லிம்களின் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.  

—-

பிரணாயாமம் சுகமான சுவாச முறை, பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா வெளியீடு, விலை 60ரூ.

மருந்துகள் இல்லாமல், பணச்செலவு இல்லாமல் ஆரோக்கிய வாழ்வு பெற உதவுவது பிராணாயாமம். அற்புதப் பலன்களை அளித்து வரும் இந்த பயிற்சியை விரிவாகவும், தெளிவாகவும் இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *